ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் த்ரிஷா

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படுவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள கொடி படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. படத்தில் வில்லித்தனம் கலந்த அரசியல்வாதியாக நடித்துள்ளார் த்ரிஷா.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு புது ஆசை பிறந்துள்ளது. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

 

27-1477552967-trisha-krishnan46