சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் இன்று சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த எம்ஐ நோட் 2 கருவி இன்றைய புதுவரவாக அமைந்திருக்கின்றது.
சீனாவின் ஆப்பிள் என அழைக்கப்படும் சியோமியின் புதுவரவு கருவியில் வழங்கப்பட்டுள்ளது ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல் சியோமி எம்ஐ நோட் 2 கருவியில் dual-curved டிஸ்ப்ளே மற்றும் 3G கிளாஸ் பேனல் கொண்டுள்ளது. 5.7 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.