Tag Archives: ஆசிரியர்தெரிவு

விஷ ஊசி ஏற்றியதிற்கு ஆதாரம் இல்லையாம் – சுமந்திரன்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 100 பேருக்கு அதிகமானோர் இந்த விஷ ஊசி விடயத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமற்போனவர்களின் நினைவுநாள்

1990 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்கள் காணாமற்போனதன் நினைவுநாள் நிகழ்வொன்று இன்று(5) நடைபெற்றது. காணாமற்போனவர்களுக்காக, செங்கலடி – கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் 25  வருடங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Read More »

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்ட வேண்டும் – பான்கிமூன்

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐநா செயலர் பான்கிமூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தினையும், மனித உரிமையின் மதிப்பினை ஏற்படுத்துவதற்கும் இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் இது. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களின் சொந்த ...

Read More »

நாளை ஐ.நா செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்திற்கு அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அழைப்பு விடுத்துள்ளது. யாழ். பொது நூலகம் முன்பாக நாளை (2) வெள்ளிக்கிழமை காலை 8.30 அளவில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள்குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலி. வடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ...

Read More »

இன்று நல்லூர் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று (31) நடைபெற்றது. ஆலய வரலாறு – தமிழ் மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம அமைச்சரான செண்பகப் பெருமாள் என்றழைக்கப்பட்ட புவனேகபாகு என்பவனால் 884ஆம் ஆண்டளவில் இவ்வாலயம் கட்டப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவனது பெயரே இவ்வாலயத்தின் கட்டிடத்தில் ‘ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு’ என பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த காலத்திலே. மன்னருடன் அரசவையும் சென்று தலை வணங்கிய தலைசிறந்த ஆலயமாக இது விளங்கியதில் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம்

‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு’ என்ற கருப்பொருளுடன் மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி உள்ளது. குறித்த ஊர்வலம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடங்கி ஐ.நா அலுவலகம் வரை செல்ல உள்ளது. மேலும், குறித்த ஊர்வலம் சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்குமான கற்றைகள் நிறுவகத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் “அரசே மறைத்த போராளிகளை வெளியே கொண்டு வா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு” போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை சுமந்து சென்றனர்.

Read More »

‘எழுக தமிழ்’ வடக்கில் நீதி கோரிப் போராட்டம்!

எதிர்வரும் 24ஆம் திகதி வடக்கு மக்களை ஒன்றிணைத்து நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொங்குதமிழ் ஒன்றுகூடலிற்கு ‘எழுக தமிழ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கண்டனப் பேரணி மற்றும் பொங்கு தமிழ் ஒன்றுகூடலினை இணைக்கும் பெயராக ‘எழுக தமிழ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழர்களை ஒரு கோசத்தின் கீழ் – ஒரு கொள்கையின்கீழ் ஒன்றிணைத்தலுக்குப் பெயரே பொங்குதமிழ். தமிழர்களைப் பீடித்துள்ள மொத்த அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் பொதுக்களத்தைக் குறிக்கும் குறியீடு. எம்மை நாமே ஆள்வதற்கும், எமக்கெதிரான அனைத்துத் தளைகளிலிருந்தும் எம்மை விடுவித்துக்கொள்ளுதலைப் பிரகடனம் செய்யும் ...

Read More »

மங்களாவிற்கு மயிலிட்டி மக்கள் எச்சரிரிக்கை!

எங்களது நிலத்தை நீங்கள் வழங்கத் தவறினால், எமது நிலத்தை மீட்பதற்கு நாம் எமது உயிரை விடவும் தயாராக உள்ளோம் என மயிலிட்டி மக்கள் நேற்று முன்தினம் (26)சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்த மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசினார். அதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். எமது நிலத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதுடன், மீன்பிடித் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாங்கள் எமது சொந்த மண்ணையும் ...

Read More »

சுன்னாகம் காவல்துறையினர் 5 பேருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு வழக்கு

சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் இளைஞர் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த ஐந்து காவல்துறையினருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி 5 இளைஞர்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் வைத்து அடித்து, மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தபோது அதில் சிறிஸ்கந்தராசா சுமணன் ...

Read More »

மைத்திரி அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெறவில்லையாம்

சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த சமயத்தில் அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்று வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென சிறீலங்காவின் அதிபர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மகாவலித் திட்ட அமைச்சராக இருந்தபோது அத்திட்டத்தை அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கையூட்டுக் கோரியதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, அவரது ஊடகப் ...

Read More »