சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த சமயத்தில் அவுஸ்திரேலிய நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்று வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென சிறீலங்காவின் அதிபர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மகாவலித் திட்ட அமைச்சராக இருந்தபோது அத்திட்டத்தை அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் கையூட்டுக் கோரியதாக செய்தி வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மைத்திரிபாலசிறிசேன சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றிருப்பதாகவும் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.