‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு’ என்ற கருப்பொருளுடன் மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி உள்ளது.
குறித்த ஊர்வலம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடங்கி ஐ.நா அலுவலகம் வரை செல்ல உள்ளது.
மேலும், குறித்த ஊர்வலம் சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்குமான கற்றைகள் நிறுவகத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் “அரசே மறைத்த போராளிகளை வெளியே கொண்டு வா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு” போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை சுமந்து சென்றனர்.
Eelamurasu Australia Online News Portal
