ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 6 பெண்கள் உட்பட 21 பேரை, காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரானுடன் தொடர்பை பேணிவந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் சஹ்ரானின் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பிறந்து 20 நாட்களான சிசுவை கொன்றது கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 20 நாட்களேயான சிசு, சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளது. இது, ஆகவும் குறைந்த வயதில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த சம்பவமாக இலங்கையில் பதிவாகியுள்ளது. பொரளை சீமாட்டி வைத்தியசாலையிலே அந்த சிசு மரணமடைந்துள்ளது. அந்த சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது எனினும், நிமோனியா காய்ச்சலே மரணத்துக்கு காரணமென கண்டறிப்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த சிசுவின் தாய், தந்தை ஆகிய இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
Read More »வரிசையாக தற்கொலை செய்துகொள்ளும் அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள்
ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக வெளியான பகீர் அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் சில அவுஸ்திரேலிய துருப்புக்கள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தின. இந்த விவகாரம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்க ஆதரவுடைய விசாரணையை முன்னெடுக்க முடிவாகியுள்ளது. இந்த நிலையிலேயே, மூன்று வார இடைவெளியில் 9 அவுஸ்திரேலிய ராணுவத்தினர் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், அவுஸ்திரேலிய துருப்புகள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொல்லும் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் வெளியாகி ...
Read More »அரபிக்கடலில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் விமானி சடலமாக மீட்பு
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -29 கே ரக போர்விமானம் கடந்த 26-ம் திகதி பயிற்சியின்போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில் இருந்து கடந்த 26-ந் திகதி புறப்பட்ட மிக்29 கே போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது அன்று மாலை 5 மணியளவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் சென்ற 2 விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால், நிஷாந்த் சிங் என்ற விமானி காணவில்லை. இதையடுத்து, மாயமான விமானி நிஷாந்த் சிங்கை தேடும்பணியில் கடற்படை, விமானப்படை ...
Read More »நீதியமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு
மஹர சிறையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கட்ட குழுவின் அறிக்கையானது இன்று (7) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியால் ஓய்வுப்பெற்ற மேன்முறையீட்டு நீதியரசர் குசலா சரோஜினி தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கபட்டது. குறித்த குழுவின் அறிக்கையே இன்று (7) குசலா சரோஜினியால் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More »கிளி. மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு கொவிட் தொற்று!
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 17 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் ஏற்கனவே குணமடைந்து வீடு சென்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்டத்தில் தற்போது கொவிட் 19 தொடர்பான நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் மாவட்டத்தில் இதுவரை 17 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ...
Read More »கேலிச்சித்திரம் குறித்து அமைச்சர் பந்துல சீற்றம்
அரசசெய்தித்தாள் ஒன்றில் தன்னை பற்றி வெளியான கேலிச்சித்திரம் குறித்து அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த பத்திரிகைகள் சில சர்வவல்லமை படைத்த அதிகாரிகளின் உத்தரவின் பேரில் செயற்படுகின்றன என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சர்வவல்லமை படைத்த அதிகாரிகள் ஜனாதிபதி பிரதமர் நாடாளுமன்றம் ஆகியவற்றின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும் விதததில் செயற்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பத்திரிகையின் நிர்வாகத்தினரை இந்த கேலிச்சித்திரம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் அழைக்கவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More »கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை நம் கண்முன்னே காணலாம் – உலக சுகாதார நிறுவன தலைவர் நம்பிக்கை
கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இணையவழியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. எனவே கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்” என கூறினார். மேலும், “கொரோனா ...
Read More »கண்ணாடி மீன் தொட்டிக்குள் கிறிஸ்மஸ் தாத்தா!
ஜப்பான்: டோக்கியோவிலுள்ள மீன் அருங்காட்சியகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமிட்ட நீச்சல் வீரர் ஒருவர் கண்ணாடி மீன்தொட்டிக்குள் மீன்களுக்கு மத்தியில் நீந்தி பார்வையாளர்களை உற்சாகபடுத்தியுள்ளார். விடுமுறை காலத்தை வரவேற்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட நபர், கண்ணாடி மீன் தொட்டிக்குள் நீந்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Read More »கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப் பில் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் நோயாளர்கள் பதிவாகும் போது நாளாந்தம் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை யிலான பி.சி.ஆர் பரிசோதனைகளை அப் பகுதி களில் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். அவர்களில் பெருமளவானோர் குறித்த மாவட்டங் களில் ஏழுமாறாகத் தெரிவு செய்யப்படுபவர்களாவர். இந்தப் பரிசோதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்களவான நோயாளர்களே கண்டறியப்படுகின்றனர். பின்னர் அவர்களின் ...
Read More »