அரசசெய்தித்தாள் ஒன்றில் தன்னை பற்றி வெளியான கேலிச்சித்திரம் குறித்து அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த பத்திரிகைகள் சில சர்வவல்லமை படைத்த அதிகாரிகளின் உத்தரவின் பேரில் செயற்படுகின்றன என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சர்வவல்லமை படைத்த அதிகாரிகள் ஜனாதிபதி பிரதமர் நாடாளுமன்றம் ஆகியவற்றின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும் விதததில் செயற்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பத்திரிகையின் நிர்வாகத்தினரை இந்த கேலிச்சித்திரம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் அழைக்கவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal