கண்ணாடி மீன் தொட்டிக்குள் கிறிஸ்மஸ் தாத்தா!

ஜப்பான்: டோக்கியோவிலுள்ள மீன் அருங்காட்சியகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமிட்ட நீச்சல் வீரர் ஒருவர் கண்ணாடி மீன்தொட்டிக்குள் மீன்களுக்கு மத்தியில் நீந்தி  பார்வையாளர்களை உற்சாகபடுத்தியுள்ளார்.

விடுமுறை காலத்தை வரவேற்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட நபர், கண்ணாடி மீன் தொட்டிக்குள் நீந்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.