கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப் பில்  தெரிவித்துள்ளார்.

சில மாவட்டங்களில் நோயாளர்கள் பதிவாகும் போது நாளாந்தம் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை யிலான பி.சி.ஆர் பரிசோதனைகளை அப் பகுதி களில் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் பெருமளவானோர் குறித்த மாவட்டங் களில் ஏழுமாறாகத் தெரிவு செய்யப்படுபவர்களாவர்.

இந்தப் பரிசோதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்களவான நோயாளர்களே கண்டறியப்படுகின்றனர்.

பின்னர் அவர்களின் தகவல்களை ஆராயும்போது, தற்போதைய கொத்தணிகளுடன் பெரும்பாலா னோருக்குத் தொடர்புள்ளமை தெரியவருகிறது.

எனவே, தற்போது கொரோனா தொற்றுப் பரவல்  ஓரளவு கட்டுப்பாட்டு நிலையில் உள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் ஊடாக ஏதாவது தலையீடு அவசிய மாகும் என்பதுடன் அதற்கு சமாந்தரமாக பொதுமக்களின் தலையீடு அவசியமாகும் என்றும் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது வரையில் கொரோனா தொற்றுக்கான பொதுவான தடுப்பூசி ஒன்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் இன்னும் ஒரு வாரத்தினுள் புதிய தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது.

எனினும், உலகில் தற்போது வரையில் பொதுவாகத் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் எந்தவொரு தடுப்பூசியும் ஏதாவது ஒரு வகையில் உறுதிப் படுத்தப்படவில்லை.அத்துடன், அங்கீகரிக்கப்படவில்லை என்பதுடன், தற்போதும் சில தடுப்பூசிகள் பரிசோதனை மட்டத்திலேயே உள்ளன.

குறித்த ஆய்வுகள் வெகுவிரைவில் நிறைவடைந்து அது குறித்த தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப் படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் விசேட வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டின் நடுப்பகுதி அளவில், பொதுப் பயன் பாட்டுக்காக ஏதாவது ஒரு தடுப்பூசி தயாராகும் என் பது உலக சுகாதார ஸ்தாபனத்தினதும், தங்களின தும் மதிப்பீடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.