கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 20 நாட்களேயான சிசு, சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளது.
இது, ஆகவும் குறைந்த வயதில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த சம்பவமாக இலங்கையில் பதிவாகியுள்ளது.
பொரளை சீமாட்டி வைத்தியசாலையிலே அந்த சிசு மரணமடைந்துள்ளது. அந்த சிசுவுக்கு
கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது எனினும், நிமோனியா காய்ச்சலே மரணத்துக்கு காரணமென கண்டறிப்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அந்த சிசுவின் தாய், தந்தை ஆகிய இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
Eelamurasu Australia Online News Portal