நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் வர முன்னரே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நிரந்தர உரிமையினை ஒருவருக்க வழங்குவதற்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவின் விழுமியங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னரே அவர் தேர்வுகளை எதிர்க்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரைக்கும் தற்போது உள்ள நடைமுறையின் படி சில வருடங்கள் வாழ்ந்த பின் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
போதைப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும்!
எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று (21) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.
Read More »மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை!
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை தடுப்போம் என்று கூறிய ஈரான் அதிபருக்கு ஆதரவு பெருகியுள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ...
Read More »மனுஸ்-நவுறு தடுப்பு முகாம்களின் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு போராட்டம்!
சட்டவிரோதமாக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்துவைப்பதற்கு லேபர் கட்சி முடிவு செய்ததன் 5வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் அகதிகள் நல அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் அமைதிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு மனுஸ் மற்றும் நவுறு தடுப்பில் முகாமில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் இதுவரை 12 உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1600 பேர் குறித்த தீவுகளில் தங்க ...
Read More »வடக்கு மாகாண முதல்வரை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தவராசா அழைப்பு!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் ...
Read More »யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்! – ஆய்வு மகாநாடு
யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கைவகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன. யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுனங்களின் இணையம் இந்த ஆய்வு மகாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகிறது. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதந்து தமது ஆய்வுக்ட்டுரைகளைச் சமர்ப்பிக்கிறார்கள். ...
Read More »புதிய அரசமைப்புக்கான மூல வரைவினால் சபையில் சலசலப்பு!
புதிய அரசமைப்புக்கான மூல வரைவு தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. மூல வரையில் மூன்று பேரை கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அந்த கையொப்பத்தில் ஒன்று, போலியானது என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து, 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், முக்கியமான விவாதமொன்று இன்று (19) நடைபெறவுள்ளது. அதனை குழப்பியடிக்கும் செயற்பாடாகவே, ...
Read More »“பெண் குழந்தை சாமிக்குச் சமம்” – விஜய் சேதுபதி
‘பெண் குழந்தை சாமிக்குச் சமம்’ என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. சென்னை, அயனாவரத்தில் 12 சிறுமி 22 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையைச் சார்ந்த பலரும் இதுகுறித்து வேதனை தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இதுபோன்ற சம்பவங்கள் பெண்ணுக்கு நடந்தாலே தாங்க முடியாது, குழந்தை அது. எவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே… கொடூரமா கொலை பண்ணாலுமே பத்தாதுனு தோணுது. தண்டனை வலுவாக இருக்க வேண்டும், பயமுறுத்த வேண்டும். உட்கார்ந்து ...
Read More »ஆஸ்திரேலிய கடல்வழியை பரிசோதித்த ஆட்கடத்தல்காரர்கள் நடுக்கடலில் சிக்கினர்!
இந்தோனேசியா/ ஆஸ்திரேலியா: படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சியில் ஈடுபட்ட ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள், ஆஸ்திரேலியா எல்லையை நெருங்கியிருந்த நிலையில் அந்நாட்டு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவை சேர்ந்த 3 பேரையும் சீனாவை சேர்ந்த 7 பேரையும் கொண்டிருந்த அப்படகு, பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை ஆளும் டர்ன்புல் அரசாங்கத்தின் எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாத மத்தியில் இப்படகு திருப்பி அனுப்பப்பட்டதாக ‘தி டெய்லி டெலிகிராப்’ என்ற ஆஸ்திரேலியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2017க்கு பிறகு, ஆஸ்திரேலியா எல்லைக்கு ...
Read More »யாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S .A எழுத்துப்பதித்த தங்க மோதிரம் !
யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றயதினம் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டிலிருந்து எஸ்.ஏ (S.A) என ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் ஒன்று கைப்பற்றப்பட்டிருந்தாபோதும் அவ்விடயத்தினையும் அதிகாரிகள் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ் கோட்டையை இராணுவத்திடமிருந்து கைப்பற்றி புலிக்கொடி ஏற்றிய விடுதலைப் புலிகள் அக் கோட்டை தமிழரின் அடிமைச் சின்னம் எனக் கருதி அதனை கைதிகளைக் கொண்டு இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் ...
Read More »