புதிய அரசமைப்புக்கான மூல வரைவு தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
மூல வரையில் மூன்று பேரை கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அந்த கையொப்பத்தில் ஒன்று, போலியானது என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து, 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், முக்கியமான விவாதமொன்று இன்று (19) நடைபெறவுள்ளது.
அதனை குழப்பியடிக்கும் செயற்பாடாகவே, இந்த குற்றச்சாட்டை கருதுவதாக, ஆளும்தரப்பினர் பதிலளித்தனர்.
ஆளும், எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கிடையிலான கருத்து மோதல்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal