எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று (21) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.