விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம்!

நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் வர முன்னரே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நிரந்தர உரிமையினை ஒருவருக்க வழங்குவதற்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவின் விழுமியங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னரே அவர் தேர்வுகளை எதிர்க்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரைக்கும் தற்போது உள்ள நடைமுறையின் படி சில வருடங்கள் வாழ்ந்த பின் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ஒரு பகுதி விசாக்கள் அமைந்துள்ளன.

இதுவொருபுறம் இருக்க அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன் நிரந்தர வதிவிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே அவுஸ்திரேலிய அரசின் நோக்கமாக உள்ளது.

இதன் பின்னணியிலேயே அவுஸ்திரேலிய அரசாங்கம் பல இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.