சட்டவிரோதமாக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்துவைப்பதற்கு லேபர் கட்சி முடிவு செய்ததன் 5வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் அகதிகள் நல அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் அமைதிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு மனுஸ் மற்றும் நவுறு தடுப்பில் முகாமில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் இதுவரை 12 உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுமார் 1600 பேர் குறித்த தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் கடும் போக்கினை கடைப்பிடிக்கிறது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இந்த நடவடிக்கையினை கண்டித்தும், புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க வேண்டும்,
என்று கோரியும் அகதிகள் நல அமைப்புக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு வெளியில் மெழுகுதிரி ஏந்தி போராட்டம் நடத்தினர்.