புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற வெடிபொருள் விவகாரத்தினை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூடி மறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவர் யார் என்பதை வெகு விரைவில் அம்பலப்படுத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார். பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு சம்பவங்களும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி!
தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார். ஊழல் மோசடி ஆணைக்குழுக்களின் விசாரணைகளும் அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Read More »தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை என தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு எந்தவொரு கட்சியையும் பிளவு படச்செய்வதற்கு விருப்பமில்லை. ஈ.பி.ஆர்.எல்.எஃப், கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள். எனவே எந்த விதத்திலும் இப்போது இருக்கின்ற கூட்டமைப்பை பிளவுபடுத்தவில்லை. அதேபோல் ...
Read More »முன்னாள் போராளி கைது!- ஆயுதங்கள் மீட்பு!
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களுடன் கிளிநொச்சி, பளைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கரந்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் அமைந்து பயங்கரவாத புலனாய்வு பிரிவிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 2 துப்பாக்கிகளும் 150 தோட்டாக்களும் மற்றும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் சாவு!
அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த ‘பூ’ வின் பெயரில் ‘பேஸ்புக்’ ‘இன்ஸ்ட்ராகிராம்’ போன்றவற்றில் தொடங்கப்பட்ட பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் ‘பூ’ வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு அந்த நாய் இறந்தது. 12 வயதான ...
Read More »புத்தளத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்!- வெளிநாட்டு அமைப்பிற்கு தொடர்புள்ளதா?
புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் மீட்கப்பட்ட 100 கிலோ வெடிமருந்துகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இந்த வெடிமருந்துகளிற்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளிற்கும் உள்ளுர் தீவிரவாத குழுக்களிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் நாங்கள் தற்போது மிகவும் தீவிரமான ஆழமான உணர்வுபூர்வமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்து அதிகாரியொருவர் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமைக்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார் இலங்கையின் உள்நாட்டு ...
Read More »கிணற்றிலிருந்து மண் அகழ்வின்போது வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கிணற்றிலிருந்து மண் அகழும்போது பல மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவ் விடத்துக்கு விரைந்த இராணுவத்தினரும், காவல் துறையினரும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »அடுத்த மாதம் டிரம்ப், கிம் ஜாங் அன் மீண்டும் சந்திப்பு!
அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், கொரிய ...
Read More »அவுஸ்திரேலியாவில் நடைப்பயிற்சி சென்ற தாய் சடலமாக மீட்பு!
நடைப்பயிற்சி சென்ற தாய், 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவுஸ்திரலேயாவின் மாகாணத்தை சேர்ந்தவர் ஃபெலிசிட்டி சாட்போல்ட் (36). இவர் கடந்த 2010ம் ஆண்டு crew (36) என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே ஃபெலிசிட்டி கர்ப்பம் தரித்தார். தான் எதிர்பார்த்ததை விட 7 மாதங்களுக்கு முன்னதாகவே ஃபெலிசிட்டிக்கு, 2.5 கிகி எடையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை மிகவும் பலவீனமாக இருப்பதால் ஒரு ...
Read More »100 கிலோகிராம் வெடிமருந்து: 3 மாத தடுப்பு ஆணை!
வனாத்தவில்லு பகுதியில், 100 கிலோகிராம் எடை கொண்ட வெடிமருந்துகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, 3 மாத தடுப்பு ஆணையை, சி.ஐ.டியினர் பெற்றுக்கொண்டுள்ளனர். மானவனெல்லையிலுள்ள புத்தர் சிலையொன்றைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதே, இந்த வெடிமருந்துகள் தொடர்பாக தெரியவந்திருந்தது. அதன் பின்னர், சி.ஐ.டியினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »