புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் மீட்கப்பட்ட 100 கிலோ வெடிமருந்துகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இந்த வெடிமருந்துகளிற்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளிற்கும் உள்ளுர் தீவிரவாத குழுக்களிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
நாங்கள் தற்போது மிகவும் தீவிரமான ஆழமான உணர்வுபூர்வமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்து அதிகாரியொருவர் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமைக்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் மீட்கப்பட்ட மிகப்பெருமளவிலான வெடிமருந்துகள் என்பதால் இந்த விசாரணைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்குகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எங்களால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தீவிரவாத, மதவாத அமைப்புகளின் உறுப்பினர்களா என்பது குறித்தும் விசாரணை செய்துவருகின்றோம் எனவும் விசாரணை செய்துவருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal