வனாத்தவில்லு பகுதியில், 100 கிலோகிராம் எடை கொண்ட வெடிமருந்துகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, 3 மாத தடுப்பு ஆணையை, சி.ஐ.டியினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மானவனெல்லையிலுள்ள புத்தர் சிலையொன்றைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதே, இந்த வெடிமருந்துகள் தொடர்பாக தெரியவந்திருந்தது. அதன் பின்னர், சி.ஐ.டியினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal