தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார்.
ஊழல் மோசடி ஆணைக்குழுக்களின் விசாரணைகளும் அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Eelamurasu Australia Online News Portal