புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற வெடிபொருள் விவகாரத்தினை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூடி மறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவர் யார் என்பதை வெகு விரைவில் அம்பலப்படுத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு சம்பவங்களும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே காணப்படுகின்றது. பாதாள குழுவினரது மோதல்கள் சாதாரணமாகவே இடம்பெறுகின்றது.
இவ்விடயத்தில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் மீட்பு இவ்விடயங்களுக்கு விரைவில் தீர்வு காணாவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரடும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal