நடைப்பயிற்சி சென்ற தாய், 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவுஸ்திரலேயாவின் மாகாணத்தை சேர்ந்தவர் ஃபெலிசிட்டி சாட்போல்ட் (36). இவர் கடந்த 2010ம் ஆண்டு crew (36) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே ஃபெலிசிட்டி கர்ப்பம் தரித்தார். தான் எதிர்பார்த்ததை விட 7 மாதங்களுக்கு முன்னதாகவே ஃபெலிசிட்டிக்கு, 2.5 கிகி எடையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
அதில் ஒரு குழந்தை மிகவும் பலவீனமாக இருப்பதால் ஒரு வாரம் தாக்குபிடிப்பதே கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் பெரும் சோகத்தில் மூழ்கிய தம்பதி, தங்களுடைய இரட்டை குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முழு முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.
4 வாரங்களுக்கு பிறகு கண்ணீருடன் காணொளி வெளியிட்ட ஃபெலிசிட்டி, தங்களுடைய குழந்தை தேறி விட்டதாகவும், செய்த பிராத்தனைகளுக்கு பரிகாரம் கிடைத்துவிட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பயிற்சிக்கு ஃபெலிசிட்டி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.
ஆனால் அவர் வீடு வருவதற்குள் வெயிலின் வெப்பநிலை 40டிகிரியை தாண்டியது.
அப்போது ஒரு மெசேஜ் செய்த ஃபெலிசிட்டி, நான் இன்னும் 20 நிமிடங்களில் வீடு திரும்பிவிடுவேன் என கூறியுள்ளார்.
ஆனால் அதற்கும் மேல் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. போன் செய்து பார்த்தாலும் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த கணவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விரைந்த வந்த காவல் துறையினருடன் சேர்ந்து தன்னார்வலர்கள் சிலரும் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.
4 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் ஃபெலிசிட்டி இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				