தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள வெகுஜனப்போராட்டங்களிற்கு அனைத்து தமிழ அரசியல் தலைவர்களது ஆதரவையும் கைதிகளது குடும்பங்கள் நேரினில் சந்தித்து கோரிவருகின்றன. எதிர்வரும் மே மாதம் முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது போராட்டத்திற்கு ஆதரவு கோரி இச்சந்திப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனிடையே தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து. ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
நீதிமன்ற செயற்பாடுகளில் பிரதமர் ரணில் தலையிடுகின்றார்!
அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நீதிமன்ற செயற்பாடுகளில்; தலையீடு செய்துள்ளார் என என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அவ் அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே ...
Read More »கீத் நொயாரை தாக்கிய சம்பவ சந்தேக நபர்களின் பிணை இரத்து!
ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்து கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போதே கல்கிஸ்சை நீதிமன்றம் பிணை உத்தரவை இரத்துச் செய்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »கைதான முன்னாள் போராளிகளிற்கு விளக்கமறியல்!
முல்லைதீவில் இருந்து மட்டு நகருக்கு ஆயுதங்களை கடத்த முற்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் நால்வர் கைதாகியுள்ளனர். நீதிமன்றினில் ஆஜர் செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முல்லைதீவில் இருந்து மட்டக்களப்பிற்கு சில ஆயுதங்களை பேருந்தில் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை ...
Read More »விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய விவகாரம்: வைகோ காவலில்
தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசினார். இதனையடுத்து அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ...
Read More »மைதிரியின் ஆலோசனையை நிராகரித்த முதலமைச்சர்கள்!
அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடாத்து என்ற மைத்திரிபால சிறிசேனவின் யோசனையை அனைத்து மாகாண முதலமைச்சர்களும் நிராகரித்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர்களுக்கும் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் யோசனையை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்தார். இந்த திட்டம், சில மாகாணசபைகளை முன்கூட்டியே கலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத்துடன், சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாணசபைகளுக்கான பதவிக்காலம் முடிவடையவுள்ளது. மத்திய, மற்றும் வடக்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் ...
Read More »சவேந்திராவை நீதிமன்றம் அழைப்பது கடினமென்கிறது நல்லாட்சி!
நல்லாட்சி அரசினாலும் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் மறுப்பு தெரிவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதப் பிரிவு தலைவரான சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைக்குறிப்பிட்டதாக மூத்த சட்டத்தரணியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் உள்ளிட்ட 12 பேர் 58ம் படைப் பிரிவிடம் சரணடைந்திருந்தனர். பின்னர் அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு ...
Read More »போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் உயர் பதவி!
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களைப் புரிந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றினார். இறுதிக்கட்டப் போரின்போது, இவரின்கீழ் இயங்கிய 58ஆவது டிவிசன் பல போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ...
Read More »சந்தியா என்னெலிகொடவுக்கு விருது வழங்கினார் ட்ரம்பின் மனைவி!
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் 2017 ஆம் ஆண்டுக்கான “உலகில் துணிச்சலான பெண்” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலானியா டிரம்பினால் நேற்று வொஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இவரைப் போன்று உலக அளவில் காணப்படும் 13 பெண்கள் இவ்வாறு விருது வழங்கி கௌவிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது. தனது கணவனுக்காக மட்டுமன்றி காணாமல் ...
Read More »வலி.வடக்கு காணிகளை விற்பனை செய்ய இராணுவம் நிர்ப்பந்தம்!
வலி.வடக்கினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை தம்மிடம் விற்பனை செய்யவேண்டும் அல்லது மேலும் நான்கு வருடங்களிற்கு வாடகைக்கு தரவேண்டுமென இலங்கை இராணுவம் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இடம்பெயர்ந்த நிலையினில் உறவினர் நண்பர்களது வீடுகளினில் வாழ்ந்து வரும் குடும்பங்களையே நேரினில் தேடிச்செல்லும் இராணுவ அதிகாரிகள் நிர்ப்பந்தித்துவருகின்றனர்.அவ்வாறு விற்பனை செய்யவிருப்பமில்லாவிடின் வாடகை ஒப்பந்தமொன்றை செய்துகொண்டு படைத்தரப்பிற்கு நான்கு வருட காலத்திற்கு வாடகைக்கு தரவேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது. கடந்த 30வருடங்களிற்கு மேலாக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்து உதவுமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மைத்திரியிடம் விண்ணப்பித்தவர்களிற்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையினில் யாழ்ப்பாணத்திற்கு ...
Read More »