கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் 2017 ஆம் ஆண்டுக்கான “உலகில் துணிச்சலான பெண்” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலானியா டிரம்பினால் நேற்று வொஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இவரைப் போன்று உலக அளவில் காணப்படும் 13 பெண்கள் இவ்வாறு விருது வழங்கி கௌவிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.
தனது கணவனுக்காக மட்டுமன்றி காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாகவும் போராடியவர் என்பதற்காக இவர் இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.