பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் கட்டப்படுகிறது. 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு 24 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் கட்டப்படுகிறது. அங்குள்ள எச்-9 பகுதியில் 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மால்கி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் இந்த கோவில் கட்டப்படுகிறது. கோவிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
2023 பெண்கள் உலககோப்பை கால்பந்து – போட்டி நடத்தும் உரிமையை பெற்றன ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன. சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இதுதொடர்பாக நேற்று சூரிச்சில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. உலகக் கோப்பையை நடத்தும் அணிகளை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்று நியூசிலாந்து அணிகளுக்கு ஆதரவாக ...
Read More »தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்பு
தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட ...
Read More »லசந்தவின் மகளின் கடிதத்தினை அரசமைப்பு பேரவை கவனத்தில்எடுத்துள்ளது
லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க பொலிஸ் ஆணைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தினை அரசமைப்பு பேரவை கருத்திலெடுத்துள்ளது. அரசமைப்பு பேரவையின் தலைவரான கருஜெயசூரிய குறிப்பிட்ட கடிதம் குறித்து பேரவையின் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. இந்த கடிதம் குறித்து கருத்துக்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ள அரசமைப்பு பேரவை குறிப்பிட்ட கடிதம் குறித்த பொலிஸ் ஆணைக்குழுவின் பதில் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. சிஐடியின் புதிய இயக்குநர் தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க சமீபத்தில் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். ...
Read More »கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – விசாரிக்க இடைக்கால தடை
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரணாகொடவிற்கு எதிரான விசாரணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கொழும்பு உயர்நீதிமன்றம் டிரையல் அட் பார் விசாரணைகளை முன்னெடுப்பதற்கே மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த பின்னரே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Read More »உலக நாடுகளிடம் ஒத்துழைப்பு இல்லை’: ஐ.நா பொதுச்செயலர் விரக்தி
கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளின் தலைவர்களிடையே ஒத்துழைப்பு இல்லையென ஐ.நா சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் விமர்சித்துள்ளார். கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து இரண்டாம் உலக போருக்கு பின் உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என கூறிய குட்டரெஸ், சர்வதேச நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மார்ச் 23ம் தேதி அனைத்து சண்டை சச்சரவுகளை விடுத்து கொரோனாவை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. தற்போது உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ...
Read More »ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனாவுக்கு ஒருவர் பலி
ஒரு மாதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் மீண்டும் கரோனா பரவ தொடங்கியுள்ளது. சுமார் ஒரே நாளில் 20 பேருக்கு அங்கு கரோனா உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனோவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை விக்டோரியாவில் 241 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா மாகாணத்தில் கரோனா இரண்டாம் ...
Read More »சினமன் கிராண்டில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் குறித்து சிஐடியினர் தெரிவித்திருப்பது என்ன?
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்ட நபர் ஜனவரி முதல் ஏப்பிரல் வரையிலான காலப்பகுதியில் 45 மில்லியனை செலவு செய்தார் என சிஐடி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சினமன் கிராண்டில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட இன்சாவ் இப்ராஹிம் முதல் நான்கு மாதங்களில் 45 மில்லியனை செலவிட்டுள்ளார், தீவிரவாதத்தினை ஊக்குவிப்பதற்காக இந்த பணத்தினை அவர் செலவிட்டுள்ளார் என சிஐடி அதிகாரியொருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ...
Read More »பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்
பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை சிறிலங்கா உறுதி செய்யவேண்டும்- ஐந்து சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு,எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு,சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,உட்படஐந்து அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன தரிசா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ...
Read More »நாகபூசணி அம்மன் ஆலய விவகாரம்: சைவ மக்களை மனவேதனைக்குட்படுத்தியுள்ளது!
ஆலயங்களின் புனிதத்துவத்தை கேள்விக்குறியாக்காத வண்ணம் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவின் போது, பொலிஸ் மற்றும் இராணுவத்தரப்பினர் ஆலயத்திற்குள் பாதணிகளுடன் நடமாடித்திரிந்தமை சைவ மக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற விழா கடந்த இருபதாம் திகதி இடம்பெற்றது. இலங்கையில் நாகர் ஆட்சியுடன் ...
Read More »