லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க பொலிஸ் ஆணைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தினை அரசமைப்பு பேரவை கருத்திலெடுத்துள்ளது.
அரசமைப்பு பேரவையின் தலைவரான கருஜெயசூரிய குறிப்பிட்ட கடிதம் குறித்து பேரவையின் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த கடிதம் குறித்து கருத்துக்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ள அரசமைப்பு பேரவை குறிப்பிட்ட கடிதம் குறித்த பொலிஸ் ஆணைக்குழுவின் பதில் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
சிஐடியின் புதிய இயக்குநர் தொடர்பில் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க சமீபத்தில் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் ஊடகங்களிற்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான அரசமைப்பு பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பிலும், தேர்தல் ஆணைக்குழுவின் பதில் தொடர்பிலும் அரசமைப்புபேரவை ஆராய்ந்துள்ளது
Eelamurasu Australia Online News Portal