ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் பப்பு நியூ கினியாவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய பாதிரியார் அங்குள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். “பப்பு நியூ கினியாவில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு இருக்கும் நிலையற்ற சூழல் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் சிலரை சந்தித்த பிறகு தான்ன், அவர்கள் மனிதத்தன்மையற்ற நிலைமைகளுக்குள் வாழ்வதை உணர்ந்து கொண்டேன்,” எனக் கூறியுள்ளார். வின்செண்ட் வான் லாங் என்னும் அப்பாதிரியார் குழந்தையாக இருந்த பொழுது ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்தவர். ஆஸ்திரேலியாவிலிருந்து 7 பேர் கொண்ட குழுவுடன் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய நாளை பதவியேற்பு!
சிறிலங்காவின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை காலை அனுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார். இந்தப் பதவியேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. இதற்காக மக்களை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மக்களை அங்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து மக்களை அழைத்துச் செல்வதற்கு ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
Read More »யாழ்.மாவட்டத்தில் சஜித் அமோக வெற்றி!
யாழ்.மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றிபெற்றுள்ளது. அந்தவகையில் யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, கோப்பாய், மானிப்பாய், நல்லூர், பருத்தித்துறை, உடுப்பிட்டி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய தேர்தல் தொகுதிகளில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்றுள்ளார். அதன்படி புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 312722 வக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதுடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 23261 வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்திலும் சிவாஜிலிங்கம் 6845 வாக்குகளைப் ...
Read More »சஜித் அமோக வெற்றி! வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு!
வன்னி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்று முன்னிலையிலுள்ளார். வன்னி மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய தேர்தல் தொகுதிகளில் 174739 வாக்குகளைப்பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 26 105 வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்திலுள்ளார். வன்னி மாவட்டத்தில் 212778 செல்லுபடியாகும் வாக்குகளும் 216072 அளிக்கப்பட்ட வாக்குகளும் 3294 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
Read More »பளையில் எந்த வீதித் தடையும் இல்லை!
கிளிநொச்சி – பளையில் எந்தவொரு வீதித் தடையும் ஏற்படுத்தப்படவில்லை என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. பளையில் புதிய வீதித் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று போலிச் செய்திகள் பரவியது. இந்நிலையிலேயே குறித்த நிலையம் அது தொடர்பில் ஆய்வுகளை செய்து வீதித் தடைகள் எதுவும் அமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
Read More »ஆஸ்திரேலிய சிறையை விட ஈரானே மேலானது !
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர், ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆறு ஆண்டுகளாக மனுஸ்தீவு தடுப்பு முகாமில் சிறைப்பட்டு இருந்துள்ளார். பப்பு நியூ கினியா என்ற தீவு நாட்டில் உள்ள மனுஸ்தீவு முகாம் அண்மையில் மூடப்பட்டு, தலைநகர் Port Moresby அருகே Bomana குடிவரவுத் தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நிதி உதவியுடன் கட்டியெழுப்பப்பட்டது இம்மையம். கடந்த 9 வாரங்களாக இத்தடுப்பு மையத்தில் மோசமான சிறை வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மீண்டும் ஈரானுக்கு செல்லவே ஒப்புக்கொண்டுள்ளார். இங்குள்ள ...
Read More »ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் !
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000 ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டித்து வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் ...
Read More »ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ; மூன்று வாரங்கள் நீடிக்கலாம்!
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ இன்னும் மூன்று வாரங்கள் நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து ஊடகங்கள், “ ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன. 2.5 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் தீக்கு இரையாகின. காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாண்ட் ...
Read More »ஆயிரத்து 178 வாக்கு எண்ணும் நிலையங்கள்!
எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை நடைபெற வுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 1178 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக 371 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபறெவுள்ளது. மாலை ஐந்து மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு ...
Read More »அகதியின் உடலை திருப்பி அனுப்ப உதவ மறுக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட ஆப்கானிஸ்தான் அகதியின் உடலை ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது. சயத் மிர்வாஸ் ரோஹனி என்ற 32 வயது அகதி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பத்தில் சிக்கல் நீடித்து வருகின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மருத்துவராக பணியாற்றிய இவர், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் மனுஸ்தீவில் நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மனநல பாதிப்பை எதிர்கொண்ட நிலையில, மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ...
Read More »