யாழ்.மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றிபெற்றுள்ளது.
அந்தவகையில் யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, கோப்பாய், மானிப்பாய், நல்லூர், பருத்தித்துறை, உடுப்பிட்டி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய தேர்தல் தொகுதிகளில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்றுள்ளார்.
அதன்படி புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 312722 வக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதுடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 23261 வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்திலும் சிவாஜிலிங்கம் 6845 வாக்குகளைப் பெற்று 3 ஆவது இடத்திலுமுள்ளார்.
இதேவேளை, 384164 அளிக்கப்பட்ட வாக்குகளில் 372913 வாக்குகள் செல்லுபடியாகும் என்பதுடன் 11251 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Eelamurasu Australia Online News Portal