சிறிலங்காவின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை காலை அனுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார்.
இந்தப் பதவியேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. இதற்காக மக்களை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மக்களை அங்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து மக்களை அழைத்துச் செல்வதற்கு ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal