Tag Archives: ஆசிரியர்தெரிவு

உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபாருங்கள்

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ள, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு  சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதற்கமைய, ஆணைக்குழுவின்www.election.gov.lk  என்ற உத்தியோகபூர்வ  இணையத்தளத்தில் பிரவேசிக்குமாறு பொதுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அறிந்தால், உடனடியாக உங்களது கிராம அலுவலரிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையாயின் 0112860031 அல்லது  0112860032 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்;கள் கலவரத்தில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டது என அகதியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு வருடமாக முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோய் ...

Read More »

இலங்கை பயன்படுத்தவுள்ள மருந்து எது?

இலங்கை பயன்படுத்தவுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஜனவரி 11ம் திகதிக்கு முன்னர் மக்களிற்கு தெரியப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள மருந்து மற்றும் அதனை வழங்குவதற்கான நடைமுறைகள் குறி;த்து மக்களிற்கு 11 ம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் மருந்தினை கொள்வனவுசெய்யும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கு பொறுப்பினை ஜனாதிபதி லலித் வீரதுங்கவிற்கு வழங்கியுள்ளார்.

Read More »

யாழ். கல்லுண்டாயில் சுழல் காற்று; 9 வீடுகளுக்கு சேதம்

யாழ். கல்லுண்டாயில் இன்று வீசிய சுழல்காற்று காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இன்று(6) பிற்பகல் 1 மணியளவில் வீசிய சுழல் காற்றினால் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் ஜே – 136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் இச்சுழல் காற்றின் தாக்கம் காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த ...

Read More »

நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காத சீனா

சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது. இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் ...

Read More »

ஜூலியன் அசஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் தடை

விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயினை அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு நாடு கடத்த முடியாது என லண்டன் நீதிமன்றம் தீர்;ப்பளித்துள்ளது. அசஞ்சேயின் உளவியல் நிலையை கருத்தில்கொள்ளும்போது அவர் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்பதால் நீதிபதி அவரை நாடுகடத்துவதற்கு எதிரான உத்தரவை வெளியிட்டுள்ளார். விக்கிலீக்சின் இணைஸ்தாபகர் தற்கொலை செய்துகொள்வதை தடுக்ககூடிய நிலையில் அமெரிக்கா இல்லையென நீதிபதி வனேசா பரைட்செர் தெரிவித்துள்ளார். அவர் தனக்குதானே தீங்கிழைத்துக்கொள்வதற்கான தற்கொலை செய்துகொள்வதற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ள நீதிபதி மனச்சோர்வடைந்த சில நேரங்களில் விரக்தியடைந்த மனிதர் தனது எதிர்காலத்திற்காக அஞ்சுகின்றார் என்பதே அசஞ்சே ...

Read More »

வவுனியாவில் கர்ப்பிணிக்கு கொவிட்-19 தொற்று; சில பகுதிகள் முடக்கம்

வவுனியாவில் விரைவான அன்டிஜென் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா வேப்பங்குளத்தின் சில பகுதிகள் காவல் துறையால் முடக்கப்பட்டுள்ளன. வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அன்டிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண்ணின் இருப்பிடமான வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கை மற்றும் 2,3,4,5 ஆம் ஒழுங்கைப் பகுதிகள் பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டு பாதுகாப்பு கடைமைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பெண்ணுக்கு அன்டிஜென் ...

Read More »

சிறிலங்காவில் விமான நிலைய திறப்பு எப்போது?

ஜனவரி 22 க்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து வணிக விமானங்களுக்கும் விமான நிலையத்தை திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். இன்று (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டம் அதன் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Read More »

பப்புவா நியு கினியாவில் நிலச்சரிவு! 15 பேர் பலி

பப்புவா நியூ கினியாவிலுள்ள கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் அண்மைக்காலமாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டியுள்ள மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு . எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும். ஹெலிகொப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல முடியும் எனவும் ...

Read More »

உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை நிறுத்துவதற்கு பல உலக நாடுகள் ஆதரவு

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்யும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளன என பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துள்ளது. தென்னாபிhக்கா பொட்ஸ்வானா மலாவி அவுஸ்திரேலிய நியுசிலாந்து இந்தோனேசியா உட்பட பல நாடுகள் இந்த விடயத்தில் தங்களிற்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சேர் இக்பால் சக்ரைனே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவரம் பாதூரமானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் செயலணியொன்றை உருவாக்கியுள்ளோம் ஆண்டவன் அருளிலிருந்தால் நாங்கள் கொரோனாவைரசினால் ...

Read More »