பப்புவா நியூ கினியாவிலுள்ள கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் அண்மைக்காலமாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டியுள்ள மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு . எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும்.
ஹெலிகொப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல முடியும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal