இலங்கை பயன்படுத்தவுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஜனவரி 11ம் திகதிக்கு முன்னர் மக்களிற்கு தெரியப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள மருந்து மற்றும் அதனை வழங்குவதற்கான நடைமுறைகள் குறி;த்து மக்களிற்கு 11 ம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் மருந்தினை கொள்வனவுசெய்யும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கு பொறுப்பினை ஜனாதிபதி லலித் வீரதுங்கவிற்கு வழங்கியுள்ளார்.