ஜூலியன் அசஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் தடை

விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயினை அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு நாடு கடத்த முடியாது என லண்டன் நீதிமன்றம் தீர்;ப்பளித்துள்ளது.

அசஞ்சேயின் உளவியல் நிலையை கருத்தில்கொள்ளும்போது அவர் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்பதால் நீதிபதி அவரை நாடுகடத்துவதற்கு எதிரான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

விக்கிலீக்சின் இணைஸ்தாபகர் தற்கொலை செய்துகொள்வதை தடுக்ககூடிய நிலையில் அமெரிக்கா இல்லையென நீதிபதி வனேசா பரைட்செர் தெரிவித்துள்ளார்.

அவர் தனக்குதானே தீங்கிழைத்துக்கொள்வதற்கான தற்கொலை செய்துகொள்வதற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ள நீதிபதி மனச்சோர்வடைந்த சில நேரங்களில் விரக்தியடைந்த மனிதர் தனது எதிர்காலத்திற்காக அஞ்சுகின்றார் என்பதே அசஞ்சே குறித்த தனது ஒட்டுமொத்த மனப்பதிவு என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விபரித்துள்ள நடைமுறைகள் அவர் தற்கொலை செய்வதை தடுக்காது என நான் கருதுகின்றேன் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

2010 முதல் 211 முதல் பல இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியமைக்காக 49 வயது அசஞ்சே அமெரிக்காவினால் தேடப்படுகின்றார்.

விக்கிலீக்ஸ் மூலம் இரகசியங்களை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் சட்டத்தை மீறினார் உயிர்களிற்கு ஆபததை ஏற்படுத்தினார் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அரசியல்நோக்கம் கொண்டவை என அசஞ்சே தெரிவித்துள்ளார்