Tag Archives: ஆசிரியர்தெரிவு

சஜித்தின் தாயை அழைத்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் ரணில்!

சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.   சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட, ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளன மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலேயே இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தில் சஜித் பிரேமதாஸவின் பெயர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டது.   ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட பொது சம்மேளன கூட்டம் இன்று கொழும்பு ...

Read More »

ஐ.தே.க மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை அக்கட்சியின் பங்காளி கட்சிகளும் ஐ.தே.முவிலுள்ள கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானமொன்று இன்று (03) நிறைவேற்றப்பட்டது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சியின் தலைவர் என பிரேரிக்கபட்டதுடன், 52  நாட்கள் இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின்போது,  நாடாளுமன்றத்தை பாதுகாத்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் , அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ...

Read More »

சு.க. தேசிய பட்டியல் உறுப்பினர்களுக்கு ஒருவார காலக்கெடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் தேசிய பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ஏனைய கட்சிகளில் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாவதற்கு இம் மாதம் 10 ஆம் திகதி வரை காலக் கெடு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது : தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும்  லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோருக்கு கடந்த ...

Read More »

எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதே சக்திகள் எனது மனையுடனும்……!

எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன என பிரிட்டிஸ் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலேயின் தனிப்பட்ட கடிதமொன்றை மெயில் ஞாயிறுபதிப்பில்   வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஹரி இதனை தெரிவித்துள்ளார். ஹரி மெயிலிற்கு  எதிராக நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளார். மெயிலின்  ; இந்த நடவடிக்கையை ஹரி தனது மனைவிக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தனது தாய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதேநடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். விளைவுகள் குறித்து சிந்திக்காமல் ...

Read More »

அவுஸ்திரேலிய வீராங்கனை மகளிர் இருபதுக்கு – 20 போட்டியில் புதிய உலக சாதனை!

மகளிர் இருபதுக்கு – 20 போட்டியில் புதிய உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அலீசா ஹீலி என்ற வீராங்கனையே இவ்வாறு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு – 20 போட்டியிலேயே குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப் போட்டியில், அவுஸ்திரேலிய வீராங்கனையான அலீசா ஹீலி 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்களைக் குவித்து மகளிர் சர்வதேச இருபதுக்கு – ...

Read More »

ஆயுதங்களை தயாரித்து விற்று போர்களை தூண்டும் நாடுகள்!

உல­கெங்கும் இடம்­பெற்று வரும் போர்­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக ஆயு­தங்­களைத் தயா­ரி­த்து  விற்று வரும் நாடுகள்  பின்னர் அதே போர்கள் கார­ண­மாக   நாட்டை விட்டு வெளியேறும் அக­தி­களை ஏற்க  மறுத்து வரு­வ­தாக பாப்­ப­ரசர்  பிரான்சிஸ் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். இத்­தா­லிய குடி­யேற்­ற­வாசி பெற்­றோ­ருக்கு பிறந்த பாப்­ப­ரசர் பிரான்சிஸ் (82 வயது)  குடி­யேற்­ற­வா­சிகள் மற்றும் அக­தி­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் அமெ­ரிக்க  ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும்  ஐரோப்­பா­வி­லுள்ள  குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எதி­ரான   அர­சி­யல்­வா­தி­களின் குடி­வ­ரவுக் கொள்கை தொடர்பில்   அவர் கடும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி ...

Read More »

ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு!

பதுளை – மகியங்கனை வீதியின் தல்தெனவின் உள்ள பாலத்திற்கு அருகில் இருந்து ரி- 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள்  மீட்டக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் தகவலுக்கமைய அப்பகுதியை சோதனையிட்ட காவல் துறையினர்  பொதியிடப்பட்ட நிலையில் ரி- 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 737 ரவைகளை மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை யார் அப்பகுதியில் வைத்திருப்பார் என்ற கோணத்தில் காவல் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மெல்போர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் பலி!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   அவுஸ்திரேலியாவின் எம்பன்டன் பார்க் (Hampton Park) மேல் நிலை கல்லூரியில் கல்வி பயிலும் ரொரென்சோ ஜூரியன்ஸ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேல்போர்ன் நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாலையில் ரொரென்சோ ஜூரியன்ஸ் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் படுகாயமடைந்த ரொரென்சோ ஜூரியன்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந் ...

Read More »

அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை : நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் !

கடந்த ஆகஸ்ட் 01 முதல் 31 வரை அவுஸ்திரேலியா மேற்கொண்ட எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்டுள்ள மாதந்திர செய்திக்குறிப்பில், பல இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், இலங்கையிலிருந்து 13 பேருடன் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்ட இவர்கள் யாருக்கும் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது ஆஸி. எல்லைப்படை. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இவர்கள் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதே சமயம், அவுஸ்திரேலிய செல்ல ...

Read More »

அரசியல் தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தர். அவர் மேலும் தெரிவிக்கையில்,, நீதிமன்றத்தின் கட்டளைக்கு சம்மந்தப்பட்ட பௌத்த மதகுருக்கள் கட்டுப்படவில்லை.நீதிமன்றத்தின் கட்டளையினை நடை முறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சம்பவத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் கட்டளை ...

Read More »