ஐ.தே.க மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை அக்கட்சியின் பங்காளி கட்சிகளும் ஐ.தே.முவிலுள்ள கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானமொன்று இன்று (03) நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சியின் தலைவர் என பிரேரிக்கபட்டதுடன், 52  நாட்கள் இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின்போது,  நாடாளுமன்றத்தை பாதுகாத்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் , அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ஒழிப்பு, தேர்தல் முறை சீர்திருத்தம் என்பவற்றை செய்வதற்காக பணிகள் தொடர வேண்டும் எனவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பழிவாங்களுக்கு ஆளானோருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம், செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உள்ளிட்ட ஜ.தே.க முக்கியஸ்தர்களும்,  பெருமளவில் ஆதரவாளர்களும் கல்ந்துகொண்டனர்.