மகளிர் இருபதுக்கு – 20 போட்டியில் புதிய உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அலீசா ஹீலி என்ற வீராங்கனையே இவ்வாறு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு – 20 போட்டியிலேயே குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இப் போட்டியில், அவுஸ்திரேலிய வீராங்கனையான அலீசா ஹீலி 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்களைக் குவித்து மகளிர் சர்வதேச இருபதுக்கு – 20 போட்டியொன்றில் ஆகக் கூடுதலான ஓட்டத்தைக் குவித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
மகளிர் இருபதுக்கு – 20 போட்டியொன்றில் ஆகக் கூடுதலாக ஒருவர் குவித்த ஓட்டங்களின் எண்ணிக்கை இதுவாகும். அலீசா 148 ஓட்டங்களைப் பெறுவதற்கு 7 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
46 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த அலீசா ஹீலி, ஆட்டமிழக்கார் 148 ஓட்டங்களை குவித்து மகளிர் இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலிய மகளிர் அணி 2 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்களைக் குவித்த நிலையில், சர்வதேச இருபதுக்கு – 20 போட்டியொன்றில் ஆகக்கூடுதலான ஓட்ட எண்ணிக்கை என்ற தனது ஓட்ட எண்ணிக்கையை சமப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.