சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட, ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளன மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தில் சஜித் பிரேமதாஸவின் பெயர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட பொது சம்மேளன கூட்டம் இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகிய இந்த சம்மேளனக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பாராளுமன் உறுப்பினர்கள் உட்பட ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

இதன்போது கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பான யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் சஜித் பிரேமதாஸவின் பெயர் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal