Tag Archives: ஆசிரியர்தெரிவு

உயித்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பலரும் பங்கு பற்றிய நத்தார் ஆராதனை!

நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியர் தேவாலயத்தில் நள்ளிரவு பேராயர் கார்த்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட நத்தார் ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன. கடந்த ஏப்ரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பலரும் இந்த விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

Read More »

கூட்­ட­மைப்­பி­ன­ருடன் இணைந்தா போட்டி?

அடுத்த பொதுத்தேர்­தலில் நீங்கள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா என்று பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  தலை­வரும் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். மனோ கணே­சனின் பிறந்த தினத்தை முன்­னிட்டு அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்த போதே பிர­தமர் இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்ளார். தொலை­பே­சியில்  மனோ கணே­ச­னுக்கு வாழ்த்து தெரி­வித்த  பிர­தமர் பொதுத் தேர்­தலில்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் போட்­டி­யிடப் போகின்­றீர்­களா அல்­லது எங்­க­ளுடன்  போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? அல்­லது  தனித்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? என்று  கேள்வி எழுப்­பி­யுள்ளார். இதற்கு பதி­ல­ளித்த   மனோ கணேசன்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன்  ...

Read More »

இன்று முதல் சிறப்பு மோட்டார் ரோந்து நடவடிக்கை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக காவல் துறை  இன்று முதல் கொழும்பில் சிறப்பு மோட்டர் சைக்கிள் ரோந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்த 24 மணி நேர ரோந்து நடவடிக்கையில் 200 க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் காவல் துறையினர்  ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த மோட்டார் ரோந்து நடவடிக்கையானது பொது இடங்கள், மத வழிபாட்டு இடங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை கண்டி மற்றும் ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: பரிசாக சாதனைத் தொகை அறிவிப்பு!

ஜனவரி 2020-ல் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கான பரிசுத் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டு 71 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக (49.1 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பரிசுத்தொகை கடந்த தொடரைவிட 13.6% அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஆடவர், மகளிர் பிரிவு சாம்பியன்களுக்கு 4.12 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகை என்பது கொஞ்சமாக அதிகரிக்கப்பட்ட தொகையே. மாறாக இறுதிக்கு முந்தைய சுற்றுக்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரிசுத் தொகை கொஞ்சம் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறும் ...

Read More »

பத்திரிகையாளர் கசோகி கொலை : ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு சவூதி அரேபியா நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதிஅரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மர்மமாக கொலை  செய்யப்பட்டார். சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி  துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட நிலையில் அதற்கான பல ஆதாரங்கள் சிக்கின. அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 11 பேர் கைது ...

Read More »

இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான வரலாற்றுக் கடமை பிரிட்­ட­னுக்கு உண்டு!

ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டிக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் மனித உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­டு­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்தி, தமி ழர்­களின் பாது­காப்­பையும் நல­னையும் பேணு­வ­தற்கு இன்னும் காலம் பிந்­தி­வி­ட­வில்லை என்று பிரிட்­டனின் பொதுத் தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய பிர­தமர் பொரிஸ் ஜோன்­ச­னுக்கு  அனுப்பி வைத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கட்­சியின் ஸ்தாப­கரும், செய­லாளர் நாய­க­மு­க­மான நீதி­ய­சரர் சி.வீ.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். கொன்சர் வேட்டிவ் கட்­சியைச் சோந்த பிர­தமர் பொறிஸ் ஜோன்ச னின் தேர்தல் வெற்­றியை ஒட்டி அவ­ருக்கு அனுப்­பிய வாழ்த்துக் கடி­தத்தில் விக்­னேஸ்­வரன் மேலும் ...

Read More »

கடந்த அரசாங்கத்தின் வீண் செலவுகளுக்கான ஆதாரங்கள்……!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த அரசாங்கத்தின் நிதி  நிலைமை மற்றும் அரசாங்கத்தின் வீண் செலவுகள் தொடர்பான  ஆதாரங்களை ஜனவரி மாதம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவார் என்று தகவல் மற்றும் தொடர்பாடல், உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது : அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் ...

Read More »

ஆஸ்திரேலிய ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுமார் 40 அகதிகளுக்கு முறையான சிகிச்சை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்  33வயது குர்து அகதி மோஸ். மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்பட்ட சுமார் 40 அகதிகளும், பல மாதங்களாக மெல்பேர்னில் உள்ள ஒரு ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மனுஸ்தீவில் சுமார் 7 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 40 நாட்களுக்கு முன்பு ஆஸ்மா சிகிச்சைக்காக தன்னை ஆஸ்திரேலியா கொண்டு வந்ததாகக் கூறுகிறார் அகதி மோஸ். “வந்ததிலிருந்து எனக்கு ...

Read More »

அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை இயக்குநராக தமிழர் தேர்வு!

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எப்.) இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பாக ‘தேசிய அறிவியல் அறக்கட்டளை’ விளங்குகிறது. அந்நாட்டில் மருத்துவம் சாராத அறிவியல் மற்றும்பொறியியல் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு இந்த அறக்கட்டளை கணிசமான உதவிகளை செய்து வருகிறது. இதுதவிர, அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களிலும் இந்த அறக்கட்டளை முக்கியப் பங்காற்றி வருகிறது. இதனிடையே, இதன் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த பிரான்ஸ் கார்டோவாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. ...

Read More »

சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம்; உள்நாட்டு சட்டத்துக்கமையவே நடவடிக்கை!

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கானியா கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணையை இந்த நாட்டில் உள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்காக இலங்கையின் முன்னாள் சுவிட்சர்லாந்து தூதுவர் ஜோக் பெடரன் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ...

Read More »