ஜனவரி 2020-ல் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கான பரிசுத் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டு 71 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக (49.1 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது பரிசுத்தொகை கடந்த தொடரைவிட 13.6% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆடவர், மகளிர் பிரிவு சாம்பியன்களுக்கு 4.12 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகை என்பது கொஞ்சமாக அதிகரிக்கப்பட்ட தொகையே.
மாறாக இறுதிக்கு முந்தைய சுற்றுக்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரிசுத் தொகை கொஞ்சம் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறும் வீரர்களுக்கு 90,000 ஆஸ்திரேலிய டாலர்கள் கிடைக்கும். 20% அதிகரிக்கப்பட்டுள்ளது.
2வது சுற்றில் தோற்று வெளியேறும் வீரர்களுக்கும் 21.9% அதிகரிக்கப்பட்டு 128,000 ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் பார்க்கில் ஜனவரி 20ம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் திருவிழா தொடங்குகிறது.
Eelamurasu Australia Online News Portal