இன்று முதல் சிறப்பு மோட்டார் ரோந்து நடவடிக்கை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக காவல் துறை  இன்று முதல் கொழும்பில் சிறப்பு மோட்டர் சைக்கிள் ரோந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த 24 மணி நேர ரோந்து நடவடிக்கையில் 200 க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் காவல் துறையினர்  ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் ரோந்து நடவடிக்கையானது பொது இடங்கள், மத வழிபாட்டு இடங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை கண்டி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலும் இத்தகைய ரோந்து நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.