Tag Archives: ஆசிரியர்தெரிவு

அமெரிக்க உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல்!

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள மிலேனியம் சலன்ஞ் கோப்ரேசன் வேலைத்திட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த அடிப்படை மனு சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை, அமெரிக்காவுடன் எக்ஸா, எம்சீசீ, சோபா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட ...

Read More »

ஆஸ்திரேலியா திறன்வாய்ந்த குடியேறிகளை வரவேற்கிறது!

பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் என்ற ஆஸ்திரேலிய நகரங்களில் திறன்வாய்ந்த வெளிநாட்டு குடியேறிகள் குடியேறுவதை அந்நாட்டு அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. பிராந்திய விசாவின் கீழ் குடியேறுபவர்களுக்கான இடப்பட்டியலில் இந்நகரங்கள் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் சுமார் 70 சதவீத மக்கள் தொகை சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களிலேயே மையம் கொண்டிருக்கும் சூழலில், பிராந்திய விசாவுக்கான பட்டியலில் பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன். பிராந்திய ஆஸ்திரேலியாவில் மேலும் 2000 திறன்வாய்ந்த வெளிநாட்டுத் ...

Read More »

சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை!

தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்றும் நாளையம் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read More »

தாக்குதலுக்கு முன் டிஎன்ஏ சோதனை நடத்தி பாக்தாதி அடையாளத்தை உறுதி செய்த அமெரிக்க படை!

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மீதான தாக்குதலுக்கு முன்னதாகவே அவரது உள்ளாடையைக் கொண்டு மரபணு (டிஎன்ஏ) சோதனை நடத்தி அவரது அடையாளத்தை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதி காரப்பூர்வமாக அறிவித்தார். மேற்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான இராக்கை சேர்ந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). சிரியா மற்றும் ...

Read More »

ஸ்ரீலங்கா ஈழம் சோசலிச குடியரசு என்னும் பெயரில் ஆட்சிமுறை!

சர்வதேச சோஷலிசத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,காணிவிடுவிப்பு  மற்றும் இனப்பிரச்சினை  என்பற்றிற்கு  தீர்வினை  பெற்றுத்தர  எதிர்பார்த்திருப்பதாக  தெரிவித்திருக்கும்  சோஷலிச சமத்துவ கட்சி இதற்கு தகுந்த  தீர்வினை பெற்றுத்தரும் வகையிலான செயற்பாடுகளை உலக அளவில் முன்னெடுத்து வருவதாகவும்,முதலாளித்துவத்தின்  காரணமாகவே  இந்த பிரச்சினைகள் ஏற்படுவதாகவும்  குறிப்பிட்டுள்ளது.   சோஷலிச  சமத்துவ  கட்சியின்  தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு  ஏற்பாடு  செய்யப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை கலாநிதி  என்.எம்.  பெரேரா  நிலையத்தில் இடம்  பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அந்த கட்சியின் ஜனாதிபதி  வேட்பாளர் ...

Read More »

கருணா, பிள்­ளையான் வழி­காட்­டலில் தேர்தல் சதி!

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல் கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளை யான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்த வர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் அவ்வமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் அரசியல் பகுப்பாய்வாளர் மேரி பொலன்ட், தமது குழுவின் சார்பில் பிரியங்கா முனசிங்கவுடன் நேற்று  செவ்வாய்க்கிழமை  ...

Read More »

மரண தண்டனைக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு!

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்திற்கு முன் உயர்நீதிமன்றம் மரணதண்டனை அமுலாக்கத்திற்கு இடமளித்தால் மரணதண்டனையை  நிறைவேற்றிவிட்டு செல்வேனென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

5 கட்சிகளின் இறுதி முடிவு நாளை மறுதினம் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின்கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ்மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்கான இறுதி முடிவினை நாளை மறுதினம் 30 ஆம் திகதி எடுக்கவுள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுப்பதற்கான 5  தமிழ்அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிரைட் இன் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி மூன்றரை மணி நேரம் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களை ...

Read More »

கோத்தாவுக்கு எதிரான பெளஸியின் உரை !-காவல் துறை விசாரணை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸி மக்களை குழப்பும் வகையில் ஆற்றியதாக கூறப்படும் உரை தொடர்பில் விஷேட விசாரணைகளை கிராண்பாஸ் காவல் துறையினர் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் கிராண்பாஸ் காவல் துறை  விஷேட அறிக்கை ஊடாக கொழும்பு பிரதான நீதிவான்  நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். வடகொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாலத்துறை பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.இதன்போதே பெளஸி மக்களை குழப்பும் வகையில் ...

Read More »

காஷ்மீருக்கு ஆதரவாக புனிதப்போர் நடத்தினால் பாகிஸ்தானுக்கு எதிராகி விடும்!

இந்திய படைகளுக்கு எதிராகவும், காஷ்மீரில் ஆயுதங்கள் ஏந்தி போராடி வருபவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது காஷ்மீர் மக்களுக்கும், இஸ்லாமாபாத்துக்கும் எதிரானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததிலிருந்து பாகிஸ்தான் கடும் அதிருப்தியுடன் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வரும் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் ...

Read More »