தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்றும் நாளையம் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal