பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸி மக்களை குழப்பும் வகையில் ஆற்றியதாக கூறப்படும் உரை தொடர்பில் விஷேட விசாரணைகளை கிராண்பாஸ் காவல் துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் கிராண்பாஸ் காவல் துறை விஷேட அறிக்கை ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
வடகொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாலத்துறை பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.இதன்போதே பெளஸி மக்களை குழப்பும் வகையில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உரையாற்றியிருந்தார்.
இந் நிலையில், குறித்த விசாரணைகளுக்காக குறித்த தினம் பெளஸி எம்.பி. ஆற்றிய உரையின் செம்மைப்படுத்தப்படாத ஒளிப்பதிவை, அந்த நிகழ்வைல் பங்கேற்ற இலத்திரணியல் ஊடகங்கலுக்கு விசாரணைகளுக்காக கிராண்பாஸ் காவல் துறைக்கு ஒப்படைக்குமாறு இதன்போது கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நிரஞ்ஜனா டி சில்வா உத்தரவிட்டார்.
Eelamurasu Australia Online News Portal