Tag Archives: ஆசிரியர்தெரிவு

பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதப்படுத்துகிறார் எனவும் அவருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்க வேண்டாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தாமல் ஒரு ...

Read More »

கருப்பினத்தவர் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் அடித்து கொலை

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோவை ஒரு பாதுகாவலர் பிடித்துக்கொள்ள மற்றொரு பாதுகாவலர் அவரின் முகத்தில் கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதலில் ஜோவோ அல்பெர்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்பொருள் அங்காடியில் வேலை ...

Read More »

9 கொரோனா மரணங்கள் இன்று பதிவு – மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்வு

இலங்கையில்  ஒரே நாளில் ஒன்பது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதியப்பட்டுள்ளது இதுதான் முதன் முறையாகும்.

Read More »

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யவேண்டும்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கம் நியமித்த குழு இது குறித்து ஆராய்ந்துள்ளது. அரசாங்கம் நியமித்த குழுவினர் இது குறித்து ஆராய்ந்துள்ளனர் உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி என்பது அவர்களின் கருத்தாக உள்ளது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்திரேலியில் மிக வேகமாகப் பரவும் கொரோனா!

தெற்கு அவுஸ்திரேலியாவில்  கொரோனாத் தொற்றுப்  பரவலைத்  தடுக்கும் வகையில் மிகக் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அடிலெய்ட் (Adelaide) மாகாணத்தில் கொரோனாத் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து அங்கு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு  பாடசாலைகள், பூங்காக்களில் உடற்பயிற்சி, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது, திருமணம், இறுதி ஊர்வலம் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி ...

Read More »

செயற்கைசுவாசக்கருவிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுவாசிக்க முடியாத நிலை!

ஜனாதிபதி- நாடாளுமன்ற தேர்தல்களின் போது இந்த அரசாங்கம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணப்பட்ட சாதகமான விடயங்கள் எவையும் வரவுசெலவுதிட்டத்தில் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுமக்களிற்கு வழங்கப்படவேண்டிய செயற்கை சுவாசக்கருவிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுவாசிக்க முடியாத பொதுமக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார். பொய்கள் ஏமாற்று நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் தனது இலக்குகளை அடைகின்றது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது, மூன்றில் இரண்டை பெற்றுள்ளது 20வது திருத்தத்தை நிறைவேற்றி இரட்டை பிரஜாவுரிமை குறித்த தனது பிரச்சினைக்கு ...

Read More »

கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம்

கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று விரைவில் பரவு வதைக் கருத்தில் கொண்டு, கைதிகள் மற்றும் சிறை ஊழி யர்களுக்குச் சுதேச மருத்துவ முறைகளை அறிமுகப் படுத்தத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதி கள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார். கொரோனா தொற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆரம்பத்தில் சமூகத்தில் காணப்பட்ட கொரோனா ...

Read More »

ஆஸ்திரேலியாவில் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள 65 அகதிகளுக்கு முறையான உரிமைகளை வழங்கக்கோரியும் அவர்களை விடுவிக்கக் கோரியும் நடந்த போராட்டதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா, மற்றும் நவுரு ஆகிய தீவுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பல அகதிகள் சரியான சிகிச்சையின்றி அவதிப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவி வரும் இச்சூழலில், பொது ஒன்றுக்கூடலுக்கான ...

Read More »

ரஷிய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

ரஷிய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஷிய நாட்டுத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று மாஸ்கோவில் காலமானார். அவருக்கு வயது 79. கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்திருக்கிறார். 1941-ல் பிறந்த அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்ற துப்யான்ஸ்கி மறைவுக்கு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். துப்யான்ஸ்கியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்!

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானிஸ்தானில் 39 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணை மூலம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. 57 சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. 25 படையினர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது குற்றங்களிற்கு உதவியுள்ளனர் என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. 2009 முதல் 2013 முதல் சிறைக்கைதிகள் விவசாயிகள் பொதுமக்களை கொலை செய்தமைக்காக 19 முன்னாள் ...

Read More »