தெற்கு அவுஸ்திரேலியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் மிகக் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அடிலெய்ட் (Adelaide) மாகாணத்தில் கொரோனாத் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து அங்கு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகள், பூங்காக்களில் உடற்பயிற்சி, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது, திருமணம், இறுதி ஊர்வலம் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.