ஜனாதிபதி- நாடாளுமன்ற தேர்தல்களின் போது இந்த அரசாங்கம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணப்பட்ட சாதகமான விடயங்கள் எவையும் வரவுசெலவுதிட்டத்தில் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிற்கு வழங்கப்படவேண்டிய செயற்கை சுவாசக்கருவிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுவாசிக்க முடியாத பொதுமக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.
பொய்கள் ஏமாற்று நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் தனது இலக்குகளை அடைகின்றது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது, மூன்றில் இரண்டை பெற்றுள்ளது 20வது திருத்தத்தை நிறைவேற்றி இரட்டை பிரஜாவுரிமை குறித்த தனது பிரச்சினைக்கு தீர்வை கண்டுள்ளது இதன் காரணமாக அதற்கு மக்கள் குறித்த கவலை இல்லை என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஆகக்குறைந்த நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.