கொட்டுமுரசு

சுவிஸ் தூதரக விவகாரத்தை வேறுபட்ட முறையில் கையாண்டிருக்க முடியும்!

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் தான் கடத்தப்பட்டு, விசாரணைக்க உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் காரணமாக இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் பாத்திரம் மீண்டுமொரு தடவை முக்கியய கவனத்தைப் பெற்றிருக்கிறது. பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறியே அந்த ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான ஒரு நிலைவரமாகும். அவரின் கடத்தல் தொடர்பாகக் கூறப்பட்ட விபரங்கள் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிசைவாக அமையவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. ஆனால்,  ...

Read More »

ஒற்­று­மை­யின் அவசியம் !

தமிழ் மக்­களின் ஏகோ­பித்த அர ­சியல் தலை­மை­யாகத் தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பு விளங்­ கிய போதிலும், கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ ழ­ரசுக் கட்சி அதன் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் சம அந்­தஸ்தும், சம உரி­மையும் கொண்­ட­தாகச் செயற்­ப­ட­வில்லை. தமி­ழ­ரசுக் கட்­ சியின் வளர்ச்­சி­யிலும், மக்கள் மத்­தியில் அதன் செல்­வாக்கை வளர்த்துக் கொள்­வ­தி­லுமே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை தீவிர கவனம் செலுத்­தி­யி­ருந்­தது.  நீண்ட வர­லாற்றைக் கொண்ட தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் ஒரு முக்­கி­ய­மான கால கட்­டத்தை வந்­த­டைந்­தி­ருக்­கின்­றது. தமிழ் அர­சியல் சக்­திகள் அனைத்தும் ...

Read More »

காணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது என்கிறார் கோத்தா!

யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில்  6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது. மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை  வழங்க முடியும்.  இதனைவிட அவர்களை  மீள  கொண்டுவர முடியாது  என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் தொடர்பில் படிப்படியாக நடவடிக்கை  எடுக்கப்படும். மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில்   பரிசீலிக்க  குழுவொன்று அமைக்கப்படும்.  இதேபோன்றே ...

Read More »

முட்டிக்கொள்ளும் வெளிவிவகார கொள்கை!

லண்­டனின் வெஸ்ட்­மி­னிஸ்டர் நீதி­மன்றம், பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோவை குற்­ற­வா­ளி­யாக அறி­வித்து, தண்­டப்­பணம் செலுத்த  உத்­த­ர­ விட்­டுள்ள விவ­காரம், இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துக்கும், பிரித்­தா­னி­யா­வுக்கும் இடை­யி­லான உற­வு­களில் உர­சல்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.   கடந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி லண்­டனில் உள்ள இலங்கைத் தூத­ர­கத்­துக்கு முன்­பாக, போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த புலம்­பெயர் தமி­ழர்­களை கழுத்தை அறுத்து விடு­வது போல, சைகை மூலம் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தார், பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ. இலங்கைத் தூத­ர­கத்தின் பாது­காப்பு ஆலோ­சகர் பணி­யி­லி­ருந்த அவ­ரது இந்தச் செயல் கடு­மை­யான கண்­ட­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தது, அவ­ருக்கு ...

Read More »

ஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு!

நாட்டில் ஆட்­சி­மாற்றம் இடம்­பெற்­றுள்ள புதிய சூழலில் சர்­வ­தேச சமூகம் மற்றும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைப் பேரவை விட­யங்­களும் மீண்டும் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. ஜெனிவா மனித உரிமை பேர­வையில் அடுத்து என்ன நடக்­கப்­போ­கி­றது? இலங்கை தொடர்­பாக ஜெனி­வாவில்  நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்ற பிரே­ர­ணையின் அடுத்த நிலை என்ன? பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு   நீதி கிடைக்­குமா? ஏற்­க­னவே  ஆரம்­பிக்­கப்­பட்ட மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் தொட­ருமா?  உள்­ளிட்ட பல்­வேறு கேள்­விகள் தற்­போது மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருக்­கின்­றன. தற்­போ­தைய சூழலில் அனை­வ­ரது கவ­னமும் ஜெனிவா மனித உரிமை பேரவைப் பக்­கமே திரும்­பி­யி­ருக்­கி­றது. காரணம் எதிர்வரும் மார்ச் ...

Read More »

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்!

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும்  நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. ஹொங்கொங்கில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனநாயக ஆதரவுச் சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஹொங்கொங்  நெருக்கடியில்  கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்துவருகின்ற  அணுகுமுறைக்கான அதிர்ச்சிதரும் வகையிலான ஒரு கண்டனமாக அமைந்தது ; மொத்தம் 18 மாவட்ட சபைகளில் 17 சபைகள் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. அந்த தேர்தலில் முன்னென்றுமில்லாத அளவுக்கு வாக்காளர்கள் பெருமளவில் ( 71 சதவீதத்துக்கும் அதிகம்  ) கலந்தகொண்டனர். ...

Read More »

பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை!

தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் ...

Read More »

காதுகளைக் கொஞ்சம் பெரிதாக்குவோம்!

புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தேர்தல் முறை ...

Read More »

2019 இல் உலக நாடுகளில் 250 பத்திரிகையாளர்கள் சிறையில்!

2019 இல் தங்கள் எழுத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு மிகவும் அதிகமானதாக காணப்படுகின்றது. சீனா பத்திரிகைகள் மீதான தனது இரும்புப்பிடியை மேலும் கடினமாக்கியுள்ளஅதேவேளை  துருக்கி சுயாதீன செய்தியிடலை முற்றாக தடை செய்துள்ள நிலையிலேயே இந்த சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் சிறையிலிருந்து விடுதலையான பத்திரிகையாளர்கள் நீதிமன்ற விசாரணைகளையும் மேல்முறையீடுகளையும் எதிர்கொண்டு காத்திருக்கின்றனர். ஏதேச்சதிகாரமும், ஸ்திரமற்ற தன்மையும், ஆர்ப்பாட்டங்களும் பல பத்திரிகையாளர்கள் மத்திய கிழக்கில் சிறைகளில் வாடும் நிலையை உருவாக்கியுள்ளது.குறிப்பாக சவுதி அரேபியாவில் இந்த நிலை காணப்படுகின்றது,உலகில் பத்திரிகையாளர்கள் அதிகளவு ...

Read More »

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்!

குடும்ப அர­சியல் செய்­கின்­றார்கள் என எதி­ர­ணி­யினர் என்ன தான்  மக்கள் மத்­தியில் ராஜ­பக் ஷ அணி­யி­னரை பற்றி விமர்­சனம் செய்­தாலும் இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அதை­யெல்லாம் காதில் போடாமல் கோத்­தா­பய ராஜ­பக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்கி அழகு பார்த்­தனர்  மக்கள். எதிர்­பார்த்­தது போலவே தான் ஜனா­தி­ப­தி­யா­ன­வுடன் அண்ணன் மஹிந்­தவை  பிர­த­ம­ராக்­கினார்  ஜனா­தி­பதி  கோத்­தா­பய. தனது மற்­று­மொரு அண்ணன் சமல் ராஜ­பக் ஷவை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக்­கினார். மக்­களின் மெளனம் தொடர்­கி­றது. தேர்தல் காலத்தில்  எதி­ர­ணி­யி­ட­மி­ருந்து ஒலித்த குடும்ப அர­சியல் கோஷங்­களை  இப்­போது காண­மு­டி­ய­வில்லை. தேர்தல் ...

Read More »