Home / செய்திமுரசு / கொட்டுமுரசு (page 10)

கொட்டுமுரசு

இப்பகுதியில் சகஊடகங்களில் வெளியான பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி

இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும். ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னரான அறிவிப்புகள், ஜனாதிபதி செயலகத் தரப்பிலிருந்து விடுக்கப்படுவது அரிதாகும். இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறுமாயின், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், ...

Read More »

ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா?

வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ரணிலின் மீள் வருகையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அரச தரப்பு பயன்படுத்த முற்பட்டுள்ளது. மறுபுறம் பிரதான ...

Read More »

கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல் தெரிகிறது; அல்லது உலக முடிவின் ஒரு கண நேர தோற்றப்பாடாக தென்படுகிறது. கழிவுகள் குவிந்து கிடக்கும் ஒரு கடற்கரை கால் தொடக்கம் தலை வரையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டவர்கள் சிறு ...

Read More »

கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்

கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார். இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் ...

Read More »

எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை

எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை என்பதை எங்களால் உறுதியாக தெரிவிக்கமுடியும் என எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்ளுர் முகவரான சீ கொன்சேர்ட்டியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலில் நைட்ரிக் அசிட் கசிவு காணப்படுகின்றது என சர்வதேச கடற்பரப்பில் கப்பல் நின்றவேளை இலங்கைக்கு தகவல் வழங்கினோம் எனவும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 1 கப்பலில் இருந்தவர்களிற்கும் உங்களிற்கும் ஹார்பர் மாஸ்டருக்கும் ...

Read More »

நாம் எனும் ஆப்பிரிக்க பாண்டு தத்துவம்

மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் ஒருமுறை ஆப்பிரிக்கப் பழங்குடிச் சிறுவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். ஒரு கூடை நிறைய மிட்டாய்களை வைத்தார். “யார் அதை முதலில் அடைகிறாரோ, அவருக்கே அந்த மிட்டாய்கள் அனைத்தும்” என்றார். அனைத்துச் சிறுவர்களும் கைகோத்தார்கள், இணைந்து ஓடிக் கூடையை அடைந்தார்கள், இனிப்புகளைப் பகிர்ந்து உண்டார்கள். ஆச்சரியப்பட்ட ஆய்வாளர் கேட்டார், “தனியாக ஜெயித்திருந்தால், கூடை முழுவதும் தனி ஆளுக்குக் கிடைத்திருக்குமே?” அதற்கு ஒரு சிறுமி, “பாண்டு” என்று புன்சிரிப்புடன் ...

Read More »

‘இந்திய தேசியம்தான் எங்கள் முதன்மையான எதிரி!”

”பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!” என்கிறார் பழ.நெடுமாறன். மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ”தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் ‘தமிழகம்’ என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன? அடுத்து, இந்திய அரசியல் சட்டப் ...

Read More »

எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும்

கடந்த 31ஆம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில் ஒரு பலமான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தில் அது மிகவும் முக்கியமான ஒரு பகுதி. கடந்த 40 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு தமிழனாக ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.எரிக்கப்பட்ட நூலகத்தை தமிழ் மக்கள் எப்படி நினைவுகூர ...

Read More »

முதல் காய்ச்சல் முதல் விமானம் வரை- உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளிற்காக ஒரு தாயின் இரண்டு வார போராட்டம்

அவர்களது குடும்பம் குயின்ஸ்லாந்தின் மத்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட பின்னர்( அவரது கணவரின் விசா முடிவடைந்த பின்னர்) பிரியா நடேசலிங்கம் தனது இரு புதல்விகளினதும்-தர்னிகா 3- கோபிகா 5 உரிமைகளிற்காக தீவிரமாக குரல்கொடுப்பவராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள தனது பிள்ளைகளி;ற்காக போராடுவதை தவிர பிரியா நடேசலிங்கத்திற்கு வேறு வழியில்லை என்கின்றார் அவர்களது குடும்ப நண்பர் சிமோன் கமரூன். எல்லைகாவல்படையினர் அவர்களை கிறிஸ்மஸ் தடுப்பு முகாமிற்கு கொண்;டு சென்றது ...

Read More »

யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன. ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். ...

Read More »