Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / நவீனமயமாக்கத்தில் புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் திபெத்

நவீனமயமாக்கத்தில் புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் திபெத்

## சீனாவின் திபெத் சுயாட்சி பிராந்தியம் அதன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான சமாதானரீதியான விடுதலையின் 70 வருட நிறைவைக் கொண்டாடும் நிலையில், அபிவிருத்தியில் துள்ளிப்பாய்ந்த பல தசாப்தங்களுக்கு பிறகு புதிய நவீனமயமாக்கத்தை தொடங்குகிறது ;

## ஒரு சில தசாப்தங்களில், முனனென்றும் இல்லாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைச் செய்வதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்தில் உள்ள சகல இனக்குழுமங்களையும் ஐக்கியப்படுத்தி தலைமைதாங்கியிருக்கிறது ;
## ஐக்கியப்பட்ட, சுபிட்சம் நிறைந்ந, கலாசார ரீதியில் மேம்பட்ட, ஒத்திசைவுடைய, அழகான புதிய நவீன சோசலிச திபெத்தை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஜனாதிபதி சி ஜின்பிங் கூறியிருக்கிறார்.

லாசா, ( சின்ஹுவா) — சீனாவின் திபெத் சுயாட்சி பிராந்தியம் அதன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான சமாதான ரீதியான விடுதலையின் 70 வருட நிறைவைக் கொண்டாடும் நிலையில், அபிவிருத்தியில் பல தசாப்தகால துள்ளிப்பாய்ச்சலுக்குப் பிறகு நவீனமயமாக்கத்தில் புதிய பயணத்தை தொடங்குகிறது.

1951 சமாதான விடுதலையை அடுத்து திபெத்திய மக்கள் ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியத்தின் தளைகளில் இருந்து விடுபட்டு ஐக்கியம், முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கான பிரகாசமான பாதையில் அடியெடுத்துவைத்தார்கள்.

ஜூலை பிற்பகுதயில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளரும் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவருமான ஜனாதிபதி சி ஜின்பிங் விடுதலையின் 70வது வருடநிறைவைக் குறித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்க திபெத்துக்கு விஜயம் செய்தார்.சீனத் தலைவர் ஒருவர் கட்சியினதும் நாட்டினதும் வரலாற்றில் அவ்வாறு செய்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.

” சீன கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புதிய சீனாவோ அல்லது புதிய திபெத்தோ இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.திபெத் பணிகள் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின்மத்திய குழுவின் வழிகாட்டல்களும் கொள்கைகளும் முற்றிலும் சரியானவை ” என்று தனது விஜயத்தின்போது சி ஜின்பிங் கூறினார்.
வரலாற்று மாற்றங்கள்

81 வயதான துப்ரென் கையால்ற்சென் பழைய திபெத்தில் தனது இடர்மிக்க நாட்களை நினைவில் வைத்திருப்பதுடன் பிராந்தியத்தின் மகத்தான மாற்றத்தையும் நேரில் கண்டிருக்கிறார்.

” எமது பெற்றோர்கள் பண்ணைக்கொத்தடிமைகள்.எங்களால் வயிற்றை நிரப்புவது பெரும் கஷ்டமாக இருந்தது “என்று அவர் கூறினார்.

பழைய திபெத்தில், அதிகாரிகள், மேற்குடி வகுப்பினர் மற்றும் உயர்மட்ட லாமாக்கள் என்று முன்று பிரதான தரப்பினரும் அவர்களின் கையாட்களும் சனத்தொகையில் ஐந்து சதவீதத்தினராக இருந்தனர்.ஆனால், பெரும்பாலும் சகல நிலங்களும் கால்நடைகளும் சொந்தமாக இருந்தன.பண்ணைக்கொத்தடிமைகளிடமும் அடிமைகளிடமும் உற்பத்திக்கருவிகளோ சுதந்திரமோ இருக்கவில்லை.அவர்கள் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

1959 ஆம் ஆண்டில் திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் நிலப்பிரபுத்துவ கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது.சுமார் பத்து இலட்சம் பண்ணைக் கொத்தடிமைகளும் அடிமைகளும் சமவுரிமை அளிக்கப்பட்டார்கள்.

துப்ரென் கையால்ற்சென்னும் அவரது குடும்பமும் சிகேஸ் நகரில் 13 அறைகளையும் ஒரு கராஜையும் கொண்ட இருமாடி வீட்டில் வசித்துவருகிறார்கள்.6 பேர் கொண்ட அவரது குடும்பத்தில் ஐவருக்கு வேதனமோ அல்லது ஓய்வூதியமோ கிடைக்கிறது.

” எமது வாழ்க்கை இப்போதுள்ளதைப் போன்று முன்னெப்போதும் மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை.பழைய காலத்துடன் ஒப்பிடும்போது நாம் இப்போது முற்றிலும் வேறுபட்ட உலகை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் ” என்று துப்ரென்கையால்ற்சென் கூறினார்.

கடந்த 70 வருடங்களாக மத்திய அரசாங்கம் எமது பிராந்தியத்துக்காக வரி, உட்கட்டமைப்பு கைத்தொழில் அபிவிருத்தி, கல்வி சுகாதாரம், கலாசாரப் பேணுகை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை தழுவியதாக பல அனுகூலமான கொள்கைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

திபெத்துக்காக பிரதான தீர்மானங்களை எடுப்பதற்காகவும் திட்டங்களை வகுப்பதற்காகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு 1978 ஆம் ஆண்டில் இருந்து பிராந்தியத்தில் ஏழு தேசிய கூட்டங்களை நடத்தியிருக்கிறது.
” நாம் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற வேண்டும்.அவர்களின் ஆதரவை அணிதிரட்டி சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான தொடக்கப்புள்ளிகளுக்கும் இறுதி இலக்குகளுக்கும் ஆதரவைப்பெற வேண்டும் ” என்ற சி ஜின்பிங் 2020 ஆகஸ்டில் திபெத் பணிகள் தொடர்பான ஏழாவது மத்திய கருத்தரங்கில் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் திபெத் பிராந்தியத்தின் நிகர உள்நாட்டு உற்பத்தி 19,000 யுவான்களாக ( 2930 டொலர்களாக இருந்தது.பிராந்தியத்தின் கிராமவாசிகளின் செலவித்தக்கஆள்வீத வருமானம் 14,598 யுவான்களாக இருந்து.இது 18 வருடங்களாக இரட்டை எண் வளர்ச்சியை பிரதிபலித்து நின்றது.அதேவேளை, நகரவாசிகளின் ஆள்வீத வருமானம் 41,156 யுவான்களாக இருந்தது.

திபெத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த சகல வறியவர்களும் 2019 முடிவில் வறுமையை விரட்டியடித்தார்கள். இது வரலாற்றில் முதற்தடவையாக முற்றுமுழுதான வறுமை அந்த பிராந்தியத்தில் ஒழிக்கப்பட்டதை குறித்து நின்றது.ஒரு சில தசாப்தங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சகல இனக்குழுமங்களையும் ஐக்கியப்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டி முன்னென்றுமில்லாத வரலாற்றுமுக்கியத்துவ சாதனைகளை நிகழ்த்திக்காட்டியது. “திபெத் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, பின்தங்கிய நிலையில் இருந்து முன்னேற்றத்துக்கு,வறுமையில் இருந்து சுபிட்சத்துக்கு, கொடுங்கோன்மையில் இருந்து ஜனநாயகத்துக்கு,மூடுகையில் இருந்து திறந்த நிலைக்கு மேம்பட்டிருந்தது” மக்கள் தினசரி கடந்த வாரம் பத்திரிகை ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

திபெத்தில் சமூக ஒழுங்குமுறை வரலாற்று முக்கியத்துவமுடைய பாய்ச்சலை சாதித்தது.பொருளாதாரமும் சமூகமும் பன்முகத்திறமையுடைய அபிவிருத்தியைக் கண்டன.மக்களின் வாழ்க்கை மகத்தான முறையில் முன்னேற்றம் கண்டது.நகரப்பகுதிகளும் கிராமப்பகுதிகளும் முன்னர் இருந்த மாதிரி இருக்கவில்லை என்று அந்த ஆசிரிய தலையங்கம் மேலும் கூறியது.

நவீனமயத்துக்கான பாதையல்

ஐக்கியப்பட்ட, சுபிட்சமுடைய, கலாசார ரீதியில் மேம்பட்ட, ஒத்திசைவுடைய,அழகான புதிய நவீன சோசலிச திபெத்தை கட்டியெழுப்ப முயற்சிகள் முனனெடுக்கப்படவேண்டும் என்று சி ஜின்பிங் கூறினார்.
புதிய யுகத்தில், மத்தியஸ்தானத்தில் ஜனாதிபதி சி ஜின்பிங்கைக் கொண்டதும் நாட்டு மக்களின் ஊக்கமிக்க ஆதரவவையுயைதுமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பலம்பொருந்திய தலைமைத்துவத்தின் கீழ் திபெத் முற்றுமுழுதான வறுமையை ஒழித்து சகல அம்சங்களிலும் மிதமான சுபிட்சத்தை சாதித்தது.அந்த பிராந்தியத்தின் மக்கள் உறுதியான சமூகச் சூழலையும் கலாசார சுபிட்சத்தையும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலயும் அனுபவித்தவாறு சிறப்பான வாழ்கைகையை முன்னெடுக்கிறார்கள்.

திபெத் அதன் உற்பத்தியில் சிறப்புக்கவனத்தை செலுத்தி பயனுடைத்தன்மையின் மட்டத்தை அதிகரித்தது. உணவுப்பயிர்ச் செய்கையில் இயந்திரமயமாக்கலின் மட்டம் 65 சதவீதத்தை எட்டியது. போக்குவரத்துக்கு விரிவான நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப்பாதை மற்றும் குழாய் இணைப்பு கட்டமைப்புக்களை திபெத் நிறுவியிருக்கிறது.

கிங்காய் மாகாணத்தின் தலைநகர் சினிங்கில் இருந்து திபெத்தின் தலைநகர் லாசா வரை 1956 கிலோ மீட்டர் நீளத்துக்கு விரியும் கிங்காய் — திபெத் ரயில்வே இணைப்பு பிராந்தியத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கிறது.அது 2006 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.பிராந்தியத்தின் முதல் மின்சார ரயில்வேயான லாசா — நியிங்ஷி ரயில் பாதை இவ்வருடம் ஜூனில் திறக்கப்பட்டது.அதில் நவீனமயமான புல்லட் ரயில்கள் ஓடுகின்றன.

1951 தொடங்கி 2020 வரை திபெத்தின் கல்வித்துறைக்கு மத்திய அரசாங்கம் 22,400 கோடி யுவான்களை முதலீடு செய்திருக்கிறது. முன்பள்ளி, ஆரம்ப மற்றும் நடுதத்தர பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்ப பாடசாலைகள் உள்ளடங்கியதாக நவீன கல்வி முறைமையொன்று திபெத்தில் இருக்கிறது.

கடந்த மாதம் சி ஜின்பிங் தனது மேற்பார்வைச் சுற்றுலாவின்போது ” திபெத்தின் அபிவிருத்திக்கு சகல இனக்குழுமங்களும் கூட்டாக பங்களிப்புச் செய்து திபெத்தின் வரலாற்றை எழுதியிருக்கின்றன” என்று கூறினார்.
திபெத்தும் நாட்டின் ஏனைய பகுதிகளும் கூட்டாக முன்னெடுத்த ஆதரவுச் செயற்திட்டங்கள் திபெத்தின் புதிய கைத்தொழில்மயமாக்கத்தையும் தகவல் தொழில்பிரயோகத்தையும் நகரமயமாக்கலையும் விவசாய நவீனமயமாக்கலையும் கடந்த சில தசாப்தங்களில் சாத்தியமாக்கின.

மத்திய சீனாவின் ஹுபீய் மாகாணத்தில் முனானணி முட்டை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் ஷாங் கொங்லின் திபெத்தில் விவசாய நவீனமயமாக்கத்தை மேம்படுத்துவதில் பங்காற்றிவருகின்றார்.கடந்த வருடம் பிராந்தியத்தின் ஷனான் நகரில் பெரிய முட்டை உற்பத்தி கம்பனியொன்றை அவர் அமைத்தார்.

இந்த தொழில்துறையை போட்டித்திறன் உடையதாக்குவதற்கும் அபிவிருத்தியில் உயர்தரத்தை பேணுவதற்கும் முன்னேறிய தொழில்நுட்பம், முகாமைத்துவ வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை தனது கம்பனி கொண்டுவந்ததாக ஷாங் கூறினார்.” திபெத்தின் விசே சமதரைச் சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு பல முன்னேற்றமான திருத்தங்களையும் நாம் செய்திருக்கிறோம்”.

“சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவம், சீனப்பண்புகளுடனான சோசலிசம் மற்றும் பிராந்திய இனத்துவ சுயாட்சி முறைமை ஆகியவற்றை உறுதியாக போற்றுவதன் மலம் மாத்திரமே திபெத் தற்போதைய சுபிட்சத்தை அனுபவிக்கமுடியும்; பிரகாசமான எதிர்காலத்தை காணமுடியும் என்பது நடைமுறையில் முழுமையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று சுயாட்சிப் பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி தலைவர் ஷுவாங் யான் கூறினார்.

About குமரன்

Check Also

அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் ...