அரிசி மலை இரகசியம்

கிழக்கு மாகாணம்  இயற்கை   வளங்களால் அழகு பெறும் ஒரு மாகாணம். அதில் திருகோணமலை மாவட்டமும் இயற்கையினை மேலும் அழகு பெறச் செய்கிறது. சுற்றுலாத் தளங்களின் ஒரு பகுதியாக புல்மோட்டை அரிசி மலை காணப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பகுதியே அரிசிமலை பகுதி. பபளபளப்பான அரிசி போன்ற கற்கள் நிறைந்த இலங்கையின் விசித்திரமான கடற்கரை பிரதேசமாக இது விளங்குகிறது.

திருகோணமலை நகர் பகுதியில் இருந்து சுமார் 56 கிலோ மீற்றர் தொலைவில் இவ் அரிசி மலை பிரதேசம் காணப்படுவதுடன், புல்மோட்டை முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. கடல் பாறைகளை கொண்டு அழகாக காட்சியளிக்கும் இவ்வாறான இடங்களை, உள்ளூர், வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் அதிகம் அதிகம் பார்வையிட்டு வருகின்றனர்.

ஆனாலும் தற்போதைய கொவிட்-19 காலம் அதற்கு சரியாக இடம் கொடுக்கவில்லை. மலைப்பாங்கு காட்டு வழியாக சென்று, இந்த அரிசி மலை கடல் பரப்பை அடையமுடியும். இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அரசி போன்ற மண் வளத்தை கொண்டு காணப்படுகிறது. இங்கு ஆழம் குறைந்த பகுதியாகையால் நீராடவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

இலங்கை கடற் படையின் கட்டுப்பாட்டுக்குள் பராமரிக்கப்பட்டு வரும் இப்பிரதேசம், வரலாற்று ரீதியாக பெயர் போன தளமாக மாறியுள்ளது. இந்த பிரதேச எல்லையை அடைய, உரிய பிரதான வீதி வழியாக மலைப்பாங்கினுடாக இயற்கையை ரசித்து, 150 மீற்றர் தூரம் தொலைவில் உள்ளதை காட்சிகளாக காணலாம்.

இந்த கரையோரம்  அண்ணளவாக 100 மீற்றர் வரையான நீளமுடையதாக காணப்படுகிறது. பொன்மாலைக் குடா கிராமத்தை அண்டிய இப்பகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மை இனத்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், உரிய கடற் பரப்பில் குளிப்பதற்காக ஈடுபடுகின்றபோதும் முறையான பாதுகாப்பு இன்மை ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவ்வாறான சுற்றுலாப் பகுதிகள் பாரிய பங்களிப்புச் செய்கிறது.

இவ்வாறான சுற்றுலா தளங்களை எதிர்காலத்தில் புனித பூமியாக மாற்றினாலோ இல்லாது தொல் பொருள் என்கின்ற பேரில் வேறு பெயர்களை வைத்து சுவீகரிப்பு இடம் பெறலாம் எனவும் அதனை சுற்றியுள்ள சிறுபான்மை சமூகத்தினர் அங்கலாய்க்கின்றனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான பகுதிகளை அபிவிருத்தி செய்வதனால் மேலும் பல நன்மைகளை அடையலாம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல் மற்றும் சர்வதேச  தரத்துக்கு கொண்டு செல்லுதல் ஊடாக அந்த கிராமமும் வளர்ச்சியடைய முடியும். அரசி மலை என்பது வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற பிரதேசமாக மாறி வருகிறது.  இலங்கை கனிய மணல் என்பதும் இதனை அண்டிய புல்மோட்டை பகுதியில் உள்ளது.எப்படியாக இருந்தாலும் மனம் கவர் இயற்கை எழில் கொஞ்சும் தேசமாக, அரசி மலையை தொடர்ந்தும் மாற்றியமைக்க வேண்டும். நாலா புறங்களில் மலைகளை காடுகளை கொண்ட இப் பிரதேசத்தை சுற்றிய பகுதி எம்மவர்களை ஈர்க்கின்றது.

இயற்கையை ரசிப்பதற்கு மட்டுமல்ல, மானுடம் வாழ்வதற்கும் தான் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. தற்போதைய அசாதாரண நிலை காரணமாக பயணிகளின் வருகை  மிகக் குறைவாக உள்ளது .

கரையோரப் பகுதிகளில் ஆச்சரியமான தளமாக இதனை காண முடியும். எம்மவர்களின் சிறப்பான பார்வை பாதுகாப்பு உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு பராமரிப்பதன் ஊடாக மேலும் அபிவிருத்தி அடையச் செய்யலாம். அபிவிருத்தி என்கின்ற போர்வையில் இயற்கை வளங்களை அழிக்காமல் பாதுகாக்கப்படவேண்டும்.

பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்த வேண்டும். பயணிகளை மேலும் கவருவதற்காக வழி காட்டி படங்களை வீதி வழிகளில்  அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் .

இயற்கை வளங்களை பாதுகாத்து இயற்கையின் பகுதியாக ரசிப்பதற்கு திருகோணமலை மாவட்டம் ஒரு வரலாற்று சான்று. இது போன்று நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகரிக்க, பாரிய பங்குகளை சுற்றுலாத் துறை தருகின்றது.

இலங்கை தேசம் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது. நாலாப் புறங்களும் கடலால் சூழப்பட்ட ஒருதீவு. இதனை மையமாக வைத்து, இந்தப் புல்மோட்டை அரிசி மலை விளங்குகிறது.

உலகின் இயற்கை துறை முகங்களில் ஒன்றாக திருகோணமலை துறை முகம் விளங்குகிறது. இதனோடு இணைந்த பின்னிப் பிணைந்த கடல் பரப்பின் இணைந்ததாக அரிசி மலை பகுதி விளங்குகிறது.

நமது நாட்டில் இதனை தரிசிப்பதற்காக மேல் மாகாணம், மத்திய மாகாணம் உட்பட வடக்கு, கிழக்கு மக்கள் படை யெடுக்கிறார்கள். ஆனால், தற்போதைய சூழ் நிலை இடம் கொடுக்கவில்லை.

இதனை அண்டிய பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட நடவடிக்கைகள் முன்னர் இடம் பெற்றதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். புனித பூமியாக்க திட்டங்களை சாத்தியமாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும். நாளைய சந்ததிகளின் கைகளில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.