தலிபான் காபுலை கைப்பற்றிய தினம், ஜேர்மனியிலிருந்து நண்பர் ஒருவரின் தொலைபேசி அழைப்புடன் ஆரம்பமானது.
ஜேர்மன் தூதுரகத்தின் பணியாளர்களுடன் அந்த நாட்டின் விமானமொன்று புறப்படவுள்ளதால் என்னை விமானநிலையத்திற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஆப்கானிலிருந்து ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்படவேண்டியவர்களின் பட்டியலில் அவர் எனது பெயரை பதிவு செய்தார்.நான் ஜேர்மன் ஊடகத்திற்காக பணியாற்றியிருந்தேன்.கடந்த ஒரு வருடகாலமாக நான் விசாவை பெறுவற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன.
எனக்கு சிந்திப்பதற்கான நேரம் இருக்கவில்லை,நான் எனக்கு உயிர்தப்புவதற்கான சந்தர்ப்பம் என நினைத்தேன்,நான் உடலில் டட்டுக்கள் பொறித்த வெளிப்படையான பத்திரிகையாளன்- இவை தலிபான் பின்பற்றும் கொள்கைகளிற்கு முரணான விடயங்கள்.
நான் எனது மடிக்கணிணியையும் கையடக்க தொலைபேசியையும் மாத்திரம் எடுத்துக்கொண்டேன்,நான் வீட்டிலிருந்து புறப்பட்ட தருணத்தில் அச்சமடைந்தேன் – நான் ஒரு போதும் இவ்வளவு அழுத்தத்திற்கு உள்ளாகவில்லை.
நான் விமானநிலையத்தை அடைந்தவேளை அதன் முதல் சோதனைசாவடி வெறுமையாக காணப்பட்டது,அங்கு வழமையாக காணப்படும் பொலிஸாரும் படையினரும் காணாமல்போயிருந்தனர்.
தனியார் நிறுவனமொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மாத்திரம் காணப்பட்டார் அவர் பயணப்பொதிகளை சோதனையிட்டுக்கொண்;டிருந்தார்.
என்னிடம் விசா இல்லாததால் என்னை திருப்பி அனுப்புவார்கள் என அஞ்சினே; ,ஆனால் என்னால் திரும்பி செல்ல முடியாது.
நான் சர்வதேச பயணிகளிற்கான முனையத்தை அடைந்தவேளை நான் பார்த்த விடயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, நான் நம்பிக்கை இழக்க தொடங்கினேன்.
அங்கு ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அழும் குழந்தைகளும் காணப்பட்டனர்.என்ன செய்வது என தெரியாத நிலையில் அவர்கள் காணப்பட்டனர்.தலிபான்கள் வருவது குறி;த்து அவர்கள் அச்சமடைந்திருந்தனர்.
வெளிநாட்டவர்கள் உட்பட அவர்கள் அனைவரும் என்ன நடக்கும் என தெரியாமல் விமானநிலையம் சென்றிருந்தனர்.
தாங்கள் அங்கிருந்து தப்புவதற்கு விமானம் கிடைக்காது என அறிந்ததும் என்னை சுற்றியிருந்தவர்கள் பதட்டமடையத்தொடங்கினார்கள்.அவர்களிடம் பயணச்சீட்டுகள் இருந்தாலும் அவை பயனற்றவை, விமானம் புறப்படுமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலை காணப்ட்டது.
அவர்கள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டனர்,அவர்கள் விமானநிலையத்தை சேதப்படுத்த ஆரம்பித்தனர். ஜன்னல்களை டிக்கெட்கள் வழங்கப்படும் நிலையங்களை அவர்கள் சேதப்படுத்த ஆரம்பித்தனர். அதன் பின்னர் நிலைமை மோசமடைய ஆரம்பித்தது.
நானும் பதட்டமடைந்தாலும் நான் மூலையில் பதுங்கிக்கொண்டேன். ஜன்னலிற்கு வெளியே நான் பார்த்தேன் – துருக்கிக்கு செல்ல முயலும் விமானத்தை சுற்றி நடப்பவைகளை நான் பார்த்தேன்.மக்கள் கதறிக்கொண்டு விமானத்திற்குள் பெருமளவில் நுழைந்தனர்,விமானத்தின்படிகளில் தொங்கினார்கள். அந்த விமானம் முழுiயாக நிரம்பிகாணப்பட்டது,விமானத்தை நகரச்செய்வதற்காக படியிலிருந்தவர்களை தள்ளிவிழுத்தினார்கள், அவர்களின் அலறலை விமானநிலையத்திற்குள் இருந்த எங்களால் கேட்க முடிந்தது.
நாங்கள் இங்கிருந்து போகவிரும்புகி;ன்றோம் இ;ல்லாவிட்டால் நாங்கள் இறக்கநேரிடும் என ஒருவர் சத்தமிட்டார்.
நான் எனது தலைவிதியை பற்றி நினைத்தவாறு அச்சத்துடன் அதனை பார்த்துக்கொண்டு நின்றேன்.
எட்டரை அல்லது ஒன்பது மணியளவில் தலிபான்கள் விமானநிலையத்திற்குள் வந்துவிட்டனர் என மக்கள் சத்தமிட்டனர்,அவர்கள் சத்தமிட்டவாறு விமானநிலைய ஓடுபாதையை நோக்கி ஒடினார்கள்,
விமானநிலையத்தில் முற்றாக குழப்பநிலை காணப்பட்டது, குழப்பநிலையை கட்டுப்படுத்த எவரும் இல்லை,
விமானநிலையத்தின் கதவிற்கு வெளியே துப்பாக்கி சத்தத்தை கேட்டேன், தலிபான்கள் வந்துவிட்டார்கள் என நான் நினைத்தேன்.
என்னை சுற்றி காணப்பட்டவர்கள் அனைவரும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டிருந்தனர், நல்லது நடக்கவேண்டும் என பிரார்த்தனை செய்தனர்,நான் எனது ஜேர்மனி நண்பரை மீண்டும் தொடர்புகொண்டேன், அவர் மறுநாள் வரை ஜேர்மனி தனது பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கையை முன்னெடுக்காது என தெரிவித்தார்.அது எனக்கு மோசமான செய்தி , நான் என்ன செய்வது என சிந்தித்தேன்,
விமானநிலைய ஒடுபாதையின் போர்வீரர்களிற்கான பகுதிக்கு அமெரிக்க படையினர் சிறிய குழுவினரை அழைத்து செல்வதை நான் பார்த்தேன் – இது அமெரிக்கர்களின் நிலம் தலிபான்கள் இங்கு வரமாட்டார்கள் என ஒரு அமெரிக்க படை வீரர் வெளிநாட்டவர்களிற்கு தெரிவித்தார்.நான் பலருடன் அவர்களின் பின்னால் ஓட தொடங்கினேன்.
எங்களால் துப்பாக்கி பிரயோகத்தை செவிமடுக்க முடிந்தது.அது அச்சம் தரும் வகையில் அருகில் கேட்டது.அடுத்த சில நிமிடங்களில் நான் நேரம் என்பது முடிவிற்கு வந்துவிட்டது போல உணர்ந்தேன்,நாங்கள் போவோம் என அமெரிக்கர்கள் தெரிவித்தது மாத்திரம் எனக்கு கேட்டது.
நான் பெருமளவு மக்கள் விமானத்திற்குள் ஏறுவதை பார்த்தேன்,நானும் அவர்களுடன் ஏறினேன்,என்னால் அந்த நிமிடத்தில் அதனை மாத்திரம் செய்ய முடிந்தது,நான் வேகமாக விமானத்திற்குள் ஏற்றப்பட்டேன்,விமானத்தில் அமருவதற்கு என இடமிருக்கவில்லை,அனைவரும் நின்றுகொண்டிருந்தனர், மக்கள் ஒருவரையொருவர்பிடித்தவாறு குழந்தைகளைபிடித்தவாறு காணப்பட்டனர்.என்னால மூச்சுவிட முடியாத நிலை காணப்பட்டது.
விமானத்திற்குள் பெருமளவானவர்கள் காணப்படுவதால் விமானத்தை எடுக்க முடியாது என அமெரிக்க விமானவோட்டிகள் கதறினார்கள்.
தயவு செய்து வெளியே செல்லுங்கள் தயவு செய்து வெளியே செல்லுங்கள் என ஒரு விமானவோட்டி மன்றாடினார்.அதன் பின்னர் படையினர் வந்துமுன்னாலும் பின்பகுதியிலும்; காணப்பட்டவர்களை அகற்றினார்கள்.அங்கு நிலைமை மிகவும் குழப்பமாகவும் சங்கடமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் காணப்பட்டது.
மக்கள் ஒருவரையொருவர் தள்ளினார்கள் சுவாசிக்க முடியவில்லை ,காற்றிருக்கவில்லை. அங்கு காணப்பட்ட நிலைமை முற்றிலும் நம்பிக்கை அற்றதாகவும், கவலை அளிப்பதாகவும் அச்சமூட்டுவதாகவும் காணப்பட்டது.
நான் என்னை சுற்றிலும் கைக்குழந்தைகளுடன் காணப்படும் தாய்மார்களை பார்த்தேன் – குற்றவுணர்வில் சிக்கினேன்.
நான் விமானத்திலிருந்து இறங்க தீர்மானித்து வாசலிற்கு சென்றேன்,அவ்வேளை அமெரிக்க படையினர் விமானத்தை சுற்றி இராணுவ வாகனத்தில் வட்டமடிப்பதை பார்த்தேன்,அச்சுறுத்தல் இருப்பதால் என்னை உள்ளேயே இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
20 நிமிடங்களின் பின்னர் வாசலில் நிற்பவர்களை விமானத்திற்குள் செல்லுமாறு அமெரிக்கர்கள் கேட்டுக்கொண்டனர், நாங்கள் விமானத்திற்குள் சென்றோம் அவர்கள் கதவை மூடினார்கள்.
Eelamurasu Australia Online News Portal